உலக பாம்புகள் தினம்: கனவில் பாம்பு வந்து விரட்டி விரட்டி கொத்தினால் என்ன நடக்கும் தெரியுமா
பாம்பு கனவில் வந்து தரையில் மூன்று முறை கொத்தினால், ஒருவரைப் பீடித்திருந்த தோஷம், திருஷ்டி ஆகியவை விலகி ஐஸ்வர்யம் சேரும் என்பது நம்பிக்கை.
சென்னை: பாம்பு நம்முடைய வீட்டுக்குள் வந்துவிட்டு வெளியில் போவது போல் கனவு வந்தால் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றவேண்டும். பாம்பு கனவில் வந்து நம்மைக் கடித்தால் நம்முடைய கஷ்டம் நம்மை விட்டு விலகும். குறிப்பாக தீராத கடன் தொல்லைப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வருபவர்களுக்குத் தீர்வு கிடைக்கும்.
சிவபெருமான் தனது கழுத்தில் நாகாபரணம் அணிந்துள்ளார். முருகன் தன்னிடம் நாகத்தை வைத்துள்ளார். அம்மன்கள் நாகத்தை தலையில் சூடியிருப்பார்கள். நாகம் வழிபாட்டுக்கு உரியதாக நம் நாட்டில் உள்ளது.
இந்திய மக்கள் காலம் காலமாக நாகங்களை வழிபடுகின்றனர். பெண்கள் அம்மன் ஆலயங்களுக்கு சென்று நாக வழிபாடு செய்து, புற்றுக்குப் பால் வார்த்து வருகின்றனர். நாகங்களை வழிபாடு செய்வதை மக்கள் தொன்றுதொட்டே கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள்.
சிலரது கனவில் பாம்புகள் அடிக்கடி தென்படும். பாம்புகள் அடிக்கடி கொத்தும். இதனால் ஏதேனும் கெடுதல் நடக்குமோ என்று பலரும் பயப்படுவார்கள். உலக பாம்புகள் தினம் கடைபிடிக்கப்படும் இந்த நேரத்தில் நம்முடைய கனவில் அடிக்கடி பாம்பு வந்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

வீட்டுக்குள் பாம்பு
நம்முடைய குல தெய்வம் கூட நாக வடிவத்தில் கனவில் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. பாம்பு கனவில் வருகிறதென்றால், ஒன்று இதுநாள் வரை குலதெய்வ வழிபாடு செய்வது விடுபட்டிருந்தால், குலதெய்வம் பாம்பு வடிவில் வந்து உங்களுக்கு உணர்த்தும். பாம்பு வீட்டுக்குள் வந்துவிட்டு வெளியில் போவது போல் கனவு வந்தால் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றவேண்டும். வீட்டில் உள்ள பிள்ளைகளுக்குத் திருமணம் நடைபெறலாம்.

தலைக்கு மேல் பாம்பு
நாகப்பாம்பு நம் தலைக்குமேல் குடை பிடிப்பது போன்றோ, பாம்பு நம் மீது ஏறிச்செல்வது போன்றோ கனவு வந்தால் வேலையில் உள்ளவர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

பிரச்சினை நீங்கும்
கனவில் பாம்பு வந்து நம்மைக் கடித்தால் நம்முடைய கஷ்டம் நம்மை விட்டு விலகும். குறிப்பாக தீராத கடன் தொல்லைப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வருபவர்களுக்குத் தீர்வு கிடைக்கும்.

தோஷம் நீங்கும்
பாம்பு கனவில் வந்து தரையில் மூன்று முறை கொத்தினால், ஒருவரைப் பீடித்திருந்த தோஷம், திருஷ்டி ஆகியவை விலகி ஐஸ்வர்யம் சேரும் என்பதை நாம் உணர வேண்டும். அடிக்கடி பாம்பு கனவு வந்தால் அம்மன் கோவிலுக்கும் சிவன், முருகன் ஆலயத்திற்கும் பெருமாள் கோவிலுக்கும் சென்று வணங்கலாம்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications