நட்ட நடு சாலையில் மின்கம்பி.. சமூக அக்கறையுடன் அப்புறப்படுத்த முயன்ற இளைஞர்.. ஷாக்கடித்து பலி
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே இயற்கை உபாதைக்காக சென்றவர் சாலையில் அறுந்து கிடந்த மின்சார கம்பியை சாலையோரத்தில் வைக்க நினைத்து கையில் எடுத்தபோது ஷாக் அடித்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் இன்று காலை இயற்கை உபாதைக்காக அதே பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டம் அருகே சென்றுள்ளார்.

நள்ளிரவு சிங்காரப்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியில் இடியுடன் கனமழை பெய்த நிலையில் அந்த பகுதியில் மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது.
சாலையில் அறுந்து கிடந்த மின் கம்பியை பார்த்த ரவி சமூக அக்கறையுடன் அந்த கம்பியை எடுத்து சாலையின் ஓரத்தில் வைப்பதற்காக எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கம்பியில் இருந்த மின்சாரம் ரவி மீது பாய்ந்தது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சிங்காரப்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications