Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதிய பாகிஸ்தானாக மாறி வரும் மராத்வாடா: பால் தாக்கரே

Subscribe to Oneindia Tamil

Bal Thackeray
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தின் மராத்வாடா பகுதி இன்னொரு பாகிஸ்தானாக மாறி வருகிறது என சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே குற்றம் சாட்டியுள்ளார்.

சிவசேனையின் இதழான சாம்னாவின் தலையங்கத்தில் அவர் எழுதியுள்ளதாவது:

ஒரு காலத்தில் மராத்வாடா பகுதி புனிதர்களின் இடமாக இருந்தது. ஆன்மீகத் தலங்களுக்கு மிகவும் புகழ் பெற்று இருந்தது. தற்போது அது தீவிரவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. கடந்த 6 ஆண்டுகளாக இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்கள் மராத்வாடா பகுதியில் இருந்தே திட்டமிடப்பட்டுள்ளன.

இங்குள்ளவர்களே அந்தத் தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டுள்ளனர். இப்பகுதி தீவிரவாதிகளை தேர்வு செய்து அவர்களை தயார் படுத்தும் இடமாக மாறியுள்ளது. இதனால் மராத்வாடா புதிய பாகிஸ்தான் பகுதியாக உருவெடுத்துள்ளது.

இது மத்திய அரசின் கையாலாகாத தனத்தையே காட்டுகிறது. மத்திய உள்துறை அமைச்சகமும் உளவுத்துறை அமைப்புகளும் செயலற்றுப் போய் இருப்பதையே இது காட்டுகிறது. மராத்வாடா பகுதி தீவிரவாதிகளின் கூடாரமாக மாறியிருப்பது மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே அது பேராபத்தை விளைவிக்கும் என்று கூறியுள்ளார் தாக்கரே.

மும்பை தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அபு ஜிண்டால் மராத்வாடா பகுதியிலுள்ள ஹதிகானா அருகே உள்ள பீட் நகரைச் சேர்ந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+