டிவி நிகழ்ச்சியில் பங்கேற்க சாகசம் செய்து பரிதாபமாக பலியான கல்லூரி மாணவர்
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் 19 வயது கல்லூரி மாணவர் ஒருவர் தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சாகசம் செய்தபோது ஏற்பட்ட விபரீதத்தால் உயிர் இழந்தார்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஷாலிபந்தாவில் இருக்கும் கவுதமி கல்லூரியில் படித்து வந்தவர் ஜலீலுத்தீன்(19). அவர் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவான இந்தியா ஹாஸ் காட் டேலண்ட் நிகழ்ச்சியில் பங்கேற்க முடிவு செய்தார்.
இது குறித்து அவர் தனது பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அனுப்ப வீடியோ ஒன்றை எடுக்க முடிவு செய்தார். இந்நிலையில் அவர் கடந்த வியாழக்கிழமை தனது வீட்டிற்கு அருகே வசிக்கும் சில குழந்தைகளை அழைத்து அவர்களிடம் தான் செய்யும் சாகசத்தை வீடியோ எடுக்குமாறு கூறியுள்ளார்.
ஜலீல் தனது வாயில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீப்பந்தத்தை நோக்கி துப்பி சாகசம் செய்துள்ளார். பின்னர் மண்ணெண்ணெய்யை தனது உடலில் தெளித்து தீ வைத்துள்ளார். இதை பார்த்து பயந்து போன குழந்தைகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
தீக்காயங்களுடன் உஸ்மானியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜலீல் சிகிச்சை பலனின்றி நேற்று பலியானார்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications