மாரியம்மன் கோயில் பிரசாதம் சாப்பிட்ட 150 பேருக்கு திடீர் வாந்தி, மயக்கம்.. திருவாரூரில் பரபரப்பு
கோயில் பிரசாதம் சாப்பிட்ட 150 பேருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
திருவாரூர்: திருவாரூர் அருகே கோயில் திருவிழாவில் பிரசாதம் சாப்பிட்ட 150 பேருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் அருகே உள்ள கிராமம் குவளைக்கால். இங்குள்ள அம்மன் கோவிலில் ஆடி வெள்ளி என்பதால் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். இதனை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டன.
வழிபாடுகள் முடிவடைந்ததையடுத்து, கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. அதனை வாங்கி சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அவர்களுக்கு திடீரென வாந்தி வந்தது. சிலர் மயங்கி கீழே விழுந்தனர். இதில் 150-க்கும் மேற்பட்டோர் மிக மோசமாக பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து பிரசாதம் சாப்பிட்டு பாதிப்பு ஏற்பட்டோர் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆடி வெள்ளியன்று பக்தர்கள் கோயில் பிரசாதம் சாப்பிட்டு மயங்கி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications