பேரறிவாளனை பரோலில் விடுவிப்பது குறித்து விரைவில் அறிவிப்பு .. அமைச்சர் சிவி சண்முகம்
பேரறிவாளனை பரோலில் விடுவிப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
சென்னை: பேரறிவாளனை பரோலில் விடுவிப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் பரோலில் விடுவிக்கக் கோரி விண்ணப்பித்துள்ளார். ஆனால் அவரது பரோல் மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பேரறிவாளனுக்கு பரோல் வழங்கக்கோரி தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். நடந்து முடிந்த சட்டசபைக் கூட்டத்தொடரின் போதும் பேரறிவாளனுக்கு பரோல் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர்
உறுதியளித்திருந்தார்.
இந்நிலையில் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேரறிவாளனை பரோலில் விடுவிப்பது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று அவர் கூறினார்.
மேலும் பேரறிவாளன் பரோல் தொடர்பாக தமிழக உள்துறை செயலருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர் கூறினார். பேரறிவாளனுக்கு பரோல் வழங்க சட்டத்தில் இடம் உள்ளது என்றும் அவர் கூறினார்.மேலும் நளினி பரோல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் சிவி சண்முகம் கூறினார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications