ராஜஸ்தானில் காங், ஆட்சியை பிடித்தாலும் லோக்சபா தேர்தலில் ஷாக் காத்திருக்கு... நியூஸ் நேஷன் சர்வே
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்திருந்தாலும், வரும் லோக்சபா தேர்தலில் அக்கட்சியைவிட பாஜகவே அதிக இடங்களை வெல்லும் வாய்ப்புள்ளதாக 'நியூஸ் நேஷன்' ஒப்பினியன் போல் தெரிவிக்கிறது.
2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ராஜஸ்தானில் 25 தொகுதிகளையும் பாஜக வென்றது. ஆனால், இம்முறை நிலைமை அப்படி இருக்காது.
காங்கிரஸ் கட்சி இம்முறை சுமார் 9 தொகுதிகளை வெல்ல வாய்ப்புள்ளது. ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்த நிலையிலும், லோக்சபா தேர்தலில் பாஜகதான் ஆதிக்கம் செலுத்தப்போகிறது.

கணிசமான சரிவு
16 தொகுதிகளை பாஜக வெல்ல வாய்ப்புள்ளது. பிற கட்சிகள் எந்த தொகுதியிலும் வெல்ல வாய்ப்பில்லை. பாஜகவிற்கு 40 சதவீதம் அளவுக்கான வாக்குகள் கிடைக்கும். கடந்த லோக்சபா தேர்தலில் 55.61 சதவீத வாக்குகளை அக்கட்சி பெற்றதோடு ஒப்பிட்டால் இது கணிசமான சரிவாகும்.

வாக்கு சதவீதம் கூடுதல்
காங்கிரஸ் கட்சிக்கு 35 சதவீத வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 30.73 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. ஆனால், கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 39.3 சதவீதம் வாக்குகளை பெற்றிருந்தது நினைவுகூறத்தக்கது.

லோக்சபாவிற்கு வேறு மாதிரி
சட்டசபை தேர்தலில் பாஜக 38.8 சதவீதம் வாக்குகளை பெற்றது. ஆனால், பாஜக 73 தொகுதிகளைத்தான் வெல்ல முடிந்தது. காங்கிரஸ் 99 தொகுதிகளை வென்று கூட்டணி பலத்தோடு ஆட்சியை பிடித்தது. இருப்பினும் லோக்சபா தேர்தலுக்கு ராஜஸ்தான் மக்கள் டெல்லியை நோக்கி சிந்தனையை வைக்கிறார்கள், ஜெய்ப்பூரை நோக்கி அல்ல என்பதுதான் இந்த கருத்துக் கணிப்பின் நோக்கம்.

மக்கள் பிரச்சினை
சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு ஜெ. சொன்னாலும்கூட ராஜஸ்தான் மக்களில் 43 சதவீதம் பேர், பாஜகதான் தங்கள் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் கட்சி என நம்புகிறார்கள். காங்கிரசுக்கு 39 சதவீதம் பேர்தான் ஆதரவு அளித்துள்ளனர். 42 சதவீதம் பேர் காங்கிரஸ் அரசு மீது அதிருப்தியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications