உண்டியல், சிலை பத்திரம்.. போலி பக்தர்கள் வர்றாங்க.. ஸ்டாலினை கடுமையாக விமர்சிக்கும் தமிழிசை
கிராம சபை கூட்டத்தை பற்றி தமிழிசை சவுந்தராஜன் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை: "உண்டியல் பத்திரமுங்க.. போலி பக்தர்கள் வரப்போறாங்க" என்ற எச்சரிக்கை தொணியில் முக ஸ்டாலினை நக்கல் செய்திருக்கிறார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.
கொஞ்ச நாளா இல்லாமல் இருந்த ட்விட்டர் மோதல் திரும்பவும் ஆரம்பிச்சாச்சு. இதனை ஆரம்பித்து வைத்திருப்பது தமிழிசைதான்.

சில தினங்களுக்கு முன்புவரை திமுக தலைவர் முக.ஸ்டாலினுக்கும், தமிழிசைக்கும் தாமரை மலருமா, மலராதா என்பதில் ட்விட்டர் போர் நடந்து வந்தது. ஆனால் ஸ்டாலின் தனது கவனத்தை கமல் பக்கம் திருப்பவும் அந்த பரபரப்பு குறைந்திருந்தது.

திருமழிசையில் நேற்று நடந்த கூட்டத்தில் "கிராமங்கள்தான் கோயில், இந்த கோவிலை தேடி வந்துள்ள உண்மையான பக்தன்" என்று ஸ்டாலின் தெரிவித்தார். இதற்கு கமல் பக்கமிருந்து பதில் வரும் என்று பார்த்தால் மாறாக தமிழிசையிடமிருந்து கமெண்ட் வந்திருக்கிறது.
அன்று 1967தேர்தலில் தோற்கடித்து காங்ஆட்சிக்கு இறுதியாத்திரை நடத்திய திமுககட்சிக்கு இன்று பல்லக்குதூக்கும் காங்.?திமுக வின் இந்திஎதிர்ப்பு போராட்டத்தில் அன்றைய காங்.ஆட்சியால் துப்பாக்கிசூட்டில் கொல்லப்பட்ட திமுகவினர் ஆன்மா மன்னிக்காதநிலையில் எதிர்கூட்டணியை ஸ்டாலின் விமர்சிக்கிறார்
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) February 21, 2019
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், 'உண்டியல்கள் சிலைகள் பத்திரம். போலி பக்தர்கள் நடமாட்டம் .ஓர் எச்சரிக்கை நலன் கருதி" என்று பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே ஊழல்வாதிகள் என்று அடிக்கு ஒரு பேச்சாக பேசி வரும் தமிழிசை, இப்போது உண்டியல், சிலைகளை கொள்ளை அடிப்பவர் என்ற ரீதியில் கிண்டல் செய்து மக்களின் நலனுக்காக எச்சரிக்கை விடுப்பதாக பதிவு செய்திருக்கிறார். இதற்கு இன்னும் ஸ்டாலினிடமிருந்து பதில் இல்லை... பார்ப்போம் வருகிறதா என்று!!
-
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கோவை தெற்கு மட்டுமல்ல 10 தொகுதிகளிலும் இறங்கியடிக்க போகும் செந்தில் பாலாஜி.. அதிமுக பாஜக ஷாக் -
"செந்தில் பாலாஜி கோவையில் போட்டியிட காரணம் இதுதான்" - பிரச்சாரத்தில் ஓப்பனாக சொன்ன முதல்வர் ஸ்டாலின் -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம்












Click it and Unblock the Notifications