நவராத்திரி: அன்னை மகாலட்சுமியின் அருள் நிறைந்த மல்லிகைப்பூ..இதில் இவ்வளவு ரகசியம் இருக்கா?
சென்னை: நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படும் இந்த நேரத்தில் அன்னை மகாலட்சுமியின் அருளால் பண வருமானம் அதிகரிக்கவும். தொழில் வியாபாரம் சிறக்கவும் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம். கல்வி, செல்வம், வீரம் மூன்றும் நமக்கு அபரிமிதமாக கிடைக்க வேண்டும் என்றுதான் முப்பெரும் தேவியரை வணங்குகிறோம். செல்வ வளம் பெருக நம்முடைய வீட்டில் நாம் வாஸ்துபடி சில விசயங்களை செய்ய மறக்கக் கூடாது. மகாலட்சுமி அருள் வீடு தேடி வர வேண்டும் என்றால் பெண்கள் சில காரியங்களை மறக்காமல் செய்ய வேண்டும் என்று ஆன்மீகத்தில் கூறப்பட்டுள்ளது.
பணம் எப்போதும் ஒருவருக்கு நிரந்தரமாக வந்து கொண்டிருக்க வேண்டும் என்றால் அன்னை மகாலட்சுமியின் அருளும் குபேர பகவான் அருளும் மிக அவசியம். நம்மிடம் இருக்கும் பணத்தை மதிக்க வேண்டும். நாம் செய்யும் ஒவ்வொரு செலவுகளையும் எழுதி வைக்க வேண்டும். கணக்குகளை எழுதி வைக்க கணக்கு வழக்கின்றி பணம் தருவேன் என்று குபேர பகவானே கூறியுள்ளார்.
வீட்டின் வடக்குச் சுவர் ஜன்னலுடன் சேர்ந்து இருக்க வேண்டும். கதவு சிறிதளவு மூடப்பட்டிருக்க வேண்டும். ஜன்னல் எப்போதும் திறந்தே இருக்க வேண்டும். வீட்டில் பணம் சேருவதற்கு வடக்கு திசையும் ஜன்னலும் எந்த அளவு முக்கியமோ அந்த அளவு தென் மேற்கு திசை முக்கியம்.

பணம் வைக்கும் இடம்
வாஸ்துபடி தென்மேற்கு திசையில்தான் நாம் பணத்தை வைக்க வேண்டும். பீரோ வடக்கு பார்த்து இருக்க வேண்டும். பீரோவைத் திறக்கும்போது நம் முதுகு வடக்கு நோக்கி இருக்க வேண்டும். பணத்தை எப்போதும் மரப்பெட்டியில்தான் வைத்து எடுக்க வேண்டும். எதையும் தேக்கி வைத்துக்கொள்ளும் என்பதால்தான் தேக்கு மரம் என்று பெயர் வந்தது. அதன் உறுதியான நிலைத்தத் தன்மை நம்மிடம் பணத்தை நிரந்தரமாக தங்க வைக்கும்.

சேமிப்பு முதல் செலவு
சம்பளப்பணம் வந்த உடன் சேமிப்பு முதல் செலவாக இருக்கட்டும். எதிர்காலம் பற்றிய திட்டமிடலுக்காக சீட்டு போட்டு வைத்து இருப்பார்கள் அல்லது சேமிப்பு கணக்கு துவங்கி இருப்பார்கள் அது போன்ற சேமிப்பதற்காக ஒரு தொகையை முதல் நாளன்று நீங்கள் செலவு செய்தால் நிச்சயம் உங்களுக்கு பன்மடங்கு லாபம் தரும் பணம் சரளமாக புழங்கும்.

குல தெய்வத்திற்கு சேமிப்பு
முதல் நாள் சம்பள தொகையிலிருந்து 101 ரூபாயை மட்டும் தனியாக எடுத்து உங்கள் குல தெய்வத்திற்கு என்று சேமித்து பாருங்கள். ஒவ்வொரு மாதமும் இப்படி செய்து வந்தால் வருடம் ஒரு முறை குல தெய்வ கோவிலுக்கு சென்று அந்த பணத்தை கொண்டு செலவிட்டு வந்தால் உங்களுக்கு குலதெய்வ அருளும், அள்ள அள்ள குறையாத செல்வமும் பெருகும்.

முதல் நாளில் கடன் தர வேண்டாம்
சுய தொழில் செய்பவர்களாக இருந்தாலும் கூட அன்றைய நாள் செலவை அன்றே செய்யாமல், மாதத்தின் சம்பளமாக கணக்கு வைத்து செய்து பார்த்தால் நிறையவே மிச்சப்படுத்தலாம். சம்பளம் வந்த உடனே அதை யாருக்கும் கடனாக கொடுக்கக் கூடாது என்பது முக்கிய விதி. முதல் நாளன்று எப்பொழுதும் கடனை கொடுக்காமல் அதற்கு அடுத்த நாள் நீங்கள் கடன் கொடுக்கலாம்.

இங்கே வைக்காதீர்கள்
சம்பளம் வாங்கிக் கொண்டு வந்து சிலர் பூஜை அறையில் வைப்பார்கள். பணம் எப்போது வந்தாலும் அதை எந்தக்காரணத்தைக் கொண்டும் பூஜையறையில் வைக்காதீர்கள். பண பல பேர்களின் கைகளுக்குச் சென்று மாறி வந்திருக்கலாம். பூஜையறையை நாம் தெய்வத் தன்மையுடன் வைத்திருப்பதால் அதைப் பூஜையறையில் வைக்க வேண்டாம்.

பெண்கள் கையில் மந்திரம்
பெண்கள் மாதத்தின் முதல் நாள் அன்று பிள்ளையார் சுழி போட்டு ஒரு தாளில் வரவு, செலவு கணக்கை எழுதி வைத்து வந்தால் அந்த மாதத்தில் பணம் அபரிமிதமாக இருக்கும். சமையல் அறையில் அரிசியை சிறிது எடுத்து கொண்டு ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் ஓரிரு நாணயங்களை முதலில் குடும்ப தலைவர் கையால் இட்டு அரிசியில் புதையுமாறு செய்யவும். அவ்வப்போது மற்ற குடும்ப உறுப்பினர்கள் ஓரிரு நாணயங்களை போட்டு வைக்கலாம். இது வீட்டில் எப்போதும் அரிசியும் செல்வமும் இருந்து கொண்டே இருக்க பண்டைய காலத்தில் செய்து வந்த ஒரு முறை. ஆறு மதத்திற்கு ஒரு முறை மாற்றி விடவும். நாணயங்களை எடுத்து கொண்டு அரிசியை சமைத்து காக்கைக்கு வைக்கலாம்.

பண வரவு அதிகரிக்கும்
வீட்டின் வடக்கு பகுதியில் காலியாக உள்ள இடத்தில் ஈசான்ய மூலையில் கற்றாழை செடி ஒன்றை வளர்த்து வர நிதி நிலைமை கட்டுக்குள் அடங்கி இருக்கும். மஞ்சள் வகையில் அரியதாக கிடைக்கப்படும் கரு மஞ்சளை சிவப்பு பச்சை கலந்த பட்டுத் துணியால் கட்டி பணம் வைக்கும் இடத்தில் வைத்தால் பண வரவு அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கொடுத்த கடன் வசூலாகும்
கரு மஞ்சளை அரைத்து நெற்றியில் விபூதி போல பூசி வர வசூலாகாத பணம் வசூலாக வேண்டும் என்றாலும், இதை நம் கையோடு எடுத்துச் செல்லலாம். நீண்ட நாட்களாக வசூல் ஆகாமல் இருக்கும் கடன் தொகை கூட வசூலாகிவிடும். நீண்ட நாட்களாக இருந்து வரும் கடன் பிரச்சனைகள் தீர, இதை பணப்பெட்டியில் வைத்துக்கொள்ளலாம்.

சுப செலவு அவசியம்
பணம் நம் கைக்கு வருகிறதென்றால் அதை நல்ல விஷயங்களுக்குத் தாராளமாகச் செலவு செய்யுங்கள். உங்களை எப்போதும் செல்வந்தராகவே எண்ணிச் செலவு செய்யுங்கள். இறைக்க இறைக்க ஊறும் கிணறு போல பணம் உங்களைத் தேடி மீண்டும் மீண்டும் வரும். பணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது பணத்தை மடித்துக் கொடுக்க வேண்டும். மடிப்பு அவர்களின் பக்கமும் திறப்பு நம்முடைய பக்கமும் இருக்கும்படி கொடுங்கள்.

வாசனையான பொருட்கள்
பணப்பெட்டியில் எப்போதும் ஒரு நறுமணம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். பீரோவில் பச்சை கற்பூரம் போட்டு வைக்கலாம். பொதுவாகவே வசம்புக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி இருக்கின்றது. வசம்பில் ஒரு சிறு துண்டை வாங்கி உங்கள் பர்ஸில் வைத்துக்கொண்டால் கூட, உங்கள் பர்ஸில் இருக்கும் பணத்திற்கு பிரச்சினை வராது. பர்ஸில் இருக்கும் பணம், செலவு ஆனாலும் திரும்பவும் சீக்கிரமே உங்களிடம் தேடி வரும்.

கற்பூரவள்ளி செடி
ஒரு சிறிய தொட்டியில், கற்பூரவள்ளி செடியை நட்டு வீட்டுவாசலில் வைத்தோமேயானால், வீடு சுபிட்சம் அடையும் அந்த செடியானது, செழிப்பாக வளர வளர உங்களது முன்னேற்றமும் செழிப்பாகும். நம்முடைய வீட்டிற்குள், கண்ணுக்குத் தெரியாத எந்த கெட்ட சக்தியையும் நுழைய விடாமல் பாதுகாக்கும் சக்தியும் இந்த செடிக்கு உண்டு.

மல்லிகைப்பூக்கள்
கொத்து கொத்தாக பூத்துக் குலுங்கும் மல்லிகை பூச்செடி இருக்கும் வீட்டில் நிச்சயம் மன மகிழ்ச்சி இருக்கும். மல்லிகைப்பூ என்பது லட்சுமி கடாட்சம் நிறைந்த ஒரு பூ. வாரம் தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமையில் மல்லிகைப்பூக்களை பணம் கொடுத்து வாங்குவது நமக்கு சுபிட்சத்தை கொடுக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் மல்லி பூ கிடைக்கும் போதெல்லாம் அதை வாங்கி தங்களுடைய தலையில் சூடிக்கொள்ள வேண்டும். பூஜை அறையில் தெய்வங்களுக்கு மல்லிகைப்பூக்கள் வாங்கி அலங்கரிக்க நம் வீட்டிற்குள் மகாலட்சுமி குடியேறி விடுவாள்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications