முற்றும் மோதல்.. மகாராஷ்டிர அமைச்சர் உறவினர் வழக்கில் என்சிபி எடுத்த அதிரடி நடவடிக்கை.. அடுத்து என்ன
மும்பை: மகாராஷ்டிர அரசுக்கும் என்சிபி அமைப்புக்கும் இடையேயான மோதல் முற்றியுள்ள நிலையில், மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக்கின் மருமகன் சமீர் கான் தொடர்பான வழக்கில் என்சிபி எடுத்துள்ள முடிவு மோதலை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.
மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக ஷாருக் மகன் ஆர்யன் கான் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழகில் ஆர்யன் கானுக்கு சமீபத்தில் தான் ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்த வழக்கில் நாளுக்கு நாள் ஒவ்வொரு திருப்பங்கள் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் விசாரணை அதிகாரியாக இருந்த சமீர் வான்கடே பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

சமீர் வான்கடே
போதைப்பொருள் வழக்கில் இருந்து ஆர்யன்கானை விடுவிக்கப் போதை தடுப்பு பிரிவு போலீஸார்(என்.சி.பி) ரூ.25 கோடி பேரம் பேசியதாகவும், அதில் ரூ.8 கோடி மும்பை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடேவுக்கு கொடுக்கப்பட்டதாகவும் பகீர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து அவர் ஆர்யன் கான் வழக்கில் இருந்து நீக்கப்பட்டு, என்.சி.பி., தலைமையகத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். மேலும், மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரித்த வந்த 6 கேஸ்களும் என்சிபி உயர் அதிகாரி சஞ்சய் சிங் தலைமையிலான சிறப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர அமைச்சர்
மகாராஷ்டிர சிறுபான்மை துறை அமைச்சர் நவாப் மாலிக்கின் மருமகன் சமீர் கான் தொடர்பான வழக்கும் தற்போது சஞ்சய் சிங் தலைமையிலான சிறப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. நவாப் மாலிக்கின் மருமகன் சமீர் கான் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருக்கு 20 ஆயிரம் அனுப்பியதாக விசாரிக்கப்பட்டார். இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் 200 கிலோ போதைப்பொருட்களை வைத்திருந்ததாகக் கூறி அவரை கைது செய்தது என்சிபி. தன்னிடம் இருந்தது மூலிகை புகையிலை என்று கூறி சமீர் கான் ஜாமீன் பெற்றார்.

என்சிபி அதிரடி முடிவு
இந்த வழக்கில் தற்போது முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது சமீர் கானுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என என்சிபி அதிகாரிகள் நீதிமன்றத்தில் முறையிடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மகாராஷ்டிர அரசுக்கும் போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், என்சிபி-இன் இந்த முடிவு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

அமைச்சர் vs அதிகாரி
கடந்த சில வாரங்களாகவே என்சிபி அதிகாரியான சமீர் வான்கடேவை மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் மிக கடுமையாகத் தாக்கி பேசி வருகிறார். பாலிவுட் பிரபலங்கள் மீது போலியாகப் போதைப்பொருள் வழக்குகளைப் போட்டு அவர்களிடம் இருந்து பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் வான்கடே ஈடுபடுவதாக அமைச்சர் குற்றஞ்சாட்டினார். மேலும், சமீர் வான்கடேவின் பிறப்பு சான்றிதழை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட அமைச்சர், அவர் போலியான சாதிச் சான்றிதழை அளித்து அரசு வேலையில் சேர்ந்துள்ளதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.

வான்கடே விளக்கம்
முன்னதாக சமீர் வான்கடே சகோதரி யாஸ்மின் போதைப் பொருள் வியாபாரி ஒருவரது வாட்ஸ்அப் சாட்களையும் அமைச்சர் வெளியிட்டிருந்தார். இதனிடையே போதைப் பொருள் மாஃபியாக்கள் தன்னையும், தனது குடும்பத்தையும் சூழ்ச்சி வலையில் சிக்க வைப்பதற்கான பணிகளை பின்னிருந்து இயக்கி வருவதாகத் தெரிவித்திருந்தார். மேலும், அமைச்சர் தனது பிறப்பு சான்றிதழை வெளியிட்டது தனது தனியுரிமையை மீறும் வகையில் உள்ளதாகவும் விமர்சித்தார். அதேநேரம் சமீர் வான்கடே மீது தற்போது துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications