முள்ளும் மலரும் மகேந்திரனின் மாஸ்டர் பீஸ்! ஆமா, அன்று ராஜகுமாரன் போனை எந்த நடிகரும் எடுக்கலயாமே?
சென்னை: மகேந்திரனுக்கு இயக்கவே தெரியாது, கமலுக்கு நடிக்கவே தெரியாது, வெற்றிமாறன், ரஞ்சித் படங்களை பார்த்ததே கிடையாது என்றெல்லாம் கருத்துக்களை கூறி பலரது எதிர்விமர்சனங்களுக்குள் சிக்கி உள்ளார் டைரக்டர் ராஜகுமாரன். இதுகுறித்து தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கூறும்போது, ராஜகுமாரனை கடுமையாக கண்டித்துள்ளார்.
Madras Wing என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "விண்ணுக்கும் மண்ணுக்கும் படம் எடுப்பதற்கு முன்பே சரத்குமார், விக்ரம் இருவருமே பயங்கர பிஸியில் இருந்தனர்.. ஆனாலும், தேவயானி மீதான காதலுக்காகவே எடுத்தார் அந்த படத்தை.

டிராக் மாறி போய் கொண்டிருக்கிறார் ராஜகுமாரன்.. சரத்குமார், விக்ரம் இருவரையும் விட்டுவிட்டு தேவயானியை மட்டுமே ஃபோகஸ் செய்து எடுப்பதாக ஆர்பி சவுத்ரியிடம் புகார் சென்றிருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆர்பி சவுத்ரி நேரடியாகவே ஷூட்டிங் ஸ்பாட் சென்று ராஜகுமாரனிடம் இதுகுறித்து கேட்டிருக்கிறார்..
லெப்ட் ரைட் வாங்கிய தயாரிப்பாளர்
என்னை முழுசா நம்புங்கள், படம் முடிந்ததும் பாருங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்துள்ளார் ராஜகுமாரன். பிறகு விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தை போட்டு பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார் ஆர் பி சவுத்ரி.. என்னய்யா இப்படி படம் எடுத்து வெச்சிருக்கே? என்று கேட்டு லெப்ட்& ரைட் வாங்கிவிட்டாராம்.
படம் ரிலீஸாகி பிளாப் ஆகிவிட்டது. அதற்கு பிறகு ராஜகுமாரனுக்கு படவாய்ப்பு தரவில்லை.. இந்த நேரத்தில் தேவயானியுடன் திருமணம் நடந்து முடிந்தது.. இதனால் தேவயானியின் சிபாரிசின்பேரில், பல முன்னணி நடிகர்களுக்கு போன் செய்தார்.. ஆனால், விஜய், அஜித் யாருமே இவரது போனை எடுக்கவில்லை..
விண்ணுக்கும் மண்ணுக்கும்
அதுமட்டுமல்ல, "நான்தான் விக்ரமை விண்ணக்கும் மண்ணுக்கும் படத்தில் வளர்த்து விட்டேன்" என்று பேச ஆரம்பித்துவிட்டார் ராஜகுமாரன். இதனால் விக்ரமும் போனை எடுக்கவில்லை..
இப்படி படம் எதுவும் ராஜகுமாரனுக்கு கிடைக்காத நிலையில், திடீரென சர்ச்சையாக கருத்து கூற ஆரம்பித்துவிட்டார்.. ஒருமுறை ராஜகுமாரனிடம் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று கேட்டதற்கு, சரத்குமார் என்று சொல்லி உள்ளார்.. சரத்குமார் நல்ல நடிகர்தான்.. ஆனால், பெரும்பாலும் யாரை கேட்டாலும், ரஜினி, கமல், விஜய், அஜித்தை சொல்லும்போது, திடீரென சரத்குமார் என்றதும் பலரும் ஆச்சரியமாக பார்த்தனர்.
நெஞ்சத்தை கிள்ளாதே
யாருக்கு வேண்டுமானாலும் கருத்து சொல்ல உரிமை உள்ளது. ஆனால், பழம்பெரும் இயக்குநர் மகேந்திரனை பற்றி தற்போது விமர்சித்துள்ளதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. முள்ளும் மலரும், நெஞ்சத்தை கிள்ளாதே, உதிரிப்பூக்கள் போன்ற படைப்புகளின் உன்னதம் ராஜகுமாரனுக்கு தெரியவில்லை.
அதேபோல அமிதாப் பச்சனைவிட கமல் சின்ன நடிகர் என்று மற்றொரு பேட்டியில் சொன்னார் ராஜகுமாரன்.. அதாவது அமிதாப் பச்சன் ஆறேகால் அடி உயரம், கமல் நாலே கால் அடி உயரம் மட்டும்தானே? அப்படியானால் கமல் சின்ன நடிகர்தானே? என்று பதிலளித்தார். ஆனால், குருதிப்புனல், குணா, மகாநதி போன்ற படங்களை போல, இந்த நூற்றாண்டில் வேறு யாராலும் தரமுடியுமா?
சொந்த காசில் சூனியம்
வெற்றிமாறன், பா. ரஞ்சித் படங்களை 10 நிமிடங்களுக்கு மேல் பார்க்க முடியவில்லை, அதெல்லாம் ஒரு படமா? என்கிறார்.. அப்படியானால் அதற்கு இணையான படைப்பை ராஜகுமாரன் தந்திருக்கிறாரா? சிறந்த படைப்புகளைக் கொடுக்காமல், அடுத்த படைப்பாளிகளை விமர்சிப்பது தவறு.. இப்படிப்பட்டவர் மகேந்திரனை விமர்சிக்க தகுதியே கிடையாது. சொந்தமாக படம் எடுத்து சொந்த காசிலேயே சூனியம் வைத்து கொண்டவர்.
தேவயானியின் தோட்டத்தில் இருந்து, இயற்கையான ஷாம்பூ, சோப்பு தயாரித்து வருவதாக ராஜகுமாரன் சொல்கிறார்.. சினிமா விழாக்களுக்கு சென்று, ஒரு டேபிளில் இந்த ஆர்கானிக் பொருட்களை விரித்து வைத்து விற்று வரும் ராஜகுமாரன், மகேந்திரன் போன்ற படைப்பாளிகளை விமர்சிப்பதை ஏற்கவே முடியாது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications