With Love review : வித் லவ் எப்படி இருக்கு? ரஜினிகாந்தே ஓபனா கொடுத்த ரிவ்யூ.. அப்போ அடுத்த டூரிஸ்ட் ஃபேமிலி தானா?
சென்னை:(With Love Movie review) வரும் பிப்ரவரி 6-ந் தேதி உலகம் முழுக்க திரையரங்குகளில் ரிலீஸ் ஆகப்போகிற 'வித் லவ்' படம் இப்போவே நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கி வைச்சிருக்கு. இன்றைய இளைஞர்களின் காதல், வாழ்க்கை ஸ்டைல், அவர்களோட சின்ன சின்ன கனவுகள், குழப்பங்கள் எல்லாத்தையும் லைட்டா காமெடி கலந்த ஒரு ஃபீல் குட் ஜானரில் சொல்லியிருக்காங்க.
இந்த படத்தை மதன் டைரக்ட் பண்ணிருக்கார். லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் அசிஸ்டன்ட் டைரக்டராக இருந்தவர் தான் இவர். ஹீரோவா 'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குநரும் நடிகருமான அபிஷன் ஜீவிந்த் நடித்திருக்கிறார். ஹீரோயினாக அனஸ்வரா ராஜன். இவங்க ஜோடி இப்பவே யூத் ஆடியன்ஸ்க்கு ரொம்ப கிளிக் ஆகுதுன்னு சொல்றாங்க.

வித் லவ் திரைப்படம்
சௌந்தர்யா ரஜினிகாந்த் நடத்தும் Zion Productions, மகேஷ் ராஜின் MRP Entertainment இணைந்து இந்த படத்தை தயாரிச்சிருக்காங்க. இசை ஷான் ரோல்டன். யுவன் சங்கர் ராஜா பாடிய பாடல் ஏற்கனவே யூடியூப்ல நல்லா ஓடிக்கிட்டு இருக்கு. முதல் சிங்கிளே யூத் கிட்ட நல்ல ரீச் அடிச்சது. ட்ரெய்லரும் வந்ததும், "இது நம்ம பசங்களோட லவ் ஸ்டோரி மாதிரியே இருக்கு"ன்னு பல பேர் கமெண்ட் போட ஆரம்பிச்சிட்டாங்க.
இந்த நிலையில், ரிலீஸ்க்கு முன்னாடியே படத்துக்கு செம புஸ்ட் கிடைச்சது எப்படி என்றால், சத்யம் தியேட்டரில் நடந்த ஸ்பெஷல் ஸ்கிரீனிங்குக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேர்ல வந்து படம் பார்த்ததுதான். மகள் சௌந்தர்யா தயாரிச்ச படம் என்பதால அவர் வர்றது புரியுதுதான். ஆனா தியேட்டர்ல அவர் திடீர்னு வந்ததும், அங்க இருந்த எல்லாரும் "ஏய் தலைவர் வந்துட்டாரே!"ன்னு ஒரே ஆச்சர்யம்.
வித் லவ் படம் ரஜினிகாந்த் விமர்சனம்
(With Love movieRajinikanth review )படம் முடிஞ்சு வெளிய வந்தப்ப பத்திரிகையாளர்கள் "படம் எப்படி இருக்கு சார்?"ன்னு கேட்டதும், ரஜினி ஸ்டைலிலே சிம்பிளா, "வெரி நைஸ்... சூப்பர்... ரொம்ப நல்லா இருக்கு"ன்னு சொல்லிட்டுப் போனார். அப்புறம், "ஒரு தயாரிப்பாளராக உங்க மகள் எப்படி?"ன்னு கேட்டதுக்கு, "ரொம்ப நல்லா பண்ணியிருக்காங்க"ன்னு மனசார பாராட்டினார். அந்த இரண்டு வார்த்தை தான் இப்போ படத்துக்கே பெரிய ப்ரமோஷனா மாறிடுச்சு.
அதுமட்டுமில்லாம, இந்த ஸ்பெஷல் ஸ்கிரீனிங்குக்கு ஸ்ருதிஹாசன், அனிருத், நெல்சன், கே.எஸ்.ரவிக்குமார், சசிகுமார், சமுத்திரக்கனி, ஏ.ஆர். ரஹ்மானின் மகன் அமீன் மாதிரி பல பிரபலங்களும் வந்து படம் பார்த்திருக்காங்க. வெளியே வந்ததும் எல்லாருமே பாசிட்டிவா தான் பேசினாங்க.
சசிகுமார் "நடிச்ச எல்லாரும் நல்லா பண்ணிருக்காங்க"ன்னு சொன்னார். ஸ்ருதிஹாசன் "இந்த படம் உங்களை பழைய காதல் நினைவுகளுக்கு கூட்டிப் போகும்"ன்னு சொல்லி படத்துக்கு இன்னொரு பிளஸ் சேர்த்தார்.

வித் லவ் விமர்சனம்
பத்திரிகையாளர்களுக்காக நடந்த பிரஸாத் லேப் ஸ்கிரீனிங்குக்குப் பிறகு, பல யூடியூப் ரிவ்யூவர்கள், சினிமா விமர்சகர்கள் எல்லாரும் 3.5 முதல் 4 ஸ்டார் வரைக்கும் ரேட்டிங் கொடுத்துட்டு இருக்காங்க. "கடந்த வருஷம் டூரிஸ்ட் ஃபேமிலி எப்படி சும்மா சர்ப்ரைஸ் ஹிட்டா மாறிச்சோ, அதே மாதிரி இந்த 'வித் லவ்'யும் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு ஓடும்"ன்னு சிலர் சொல்றாங்க.
அபிஷன் ஜீவிந்த் நடிப்பைப் பார்த்தா, பள்ளி மாணவனாகவும், கல்லூரி முடிச்சு கல்யாணத்துக்காக பெண் தேடுற இளைஞனா வர்ற காட்சிகளிலும் நல்லா ஸ்கோர் பண்ணியிருக்காராம். முதல் பாடல்ல டான்ஸ்லயும் கலக்கிட்டாராம். அனஸ்வரா ராஜனும் நச்சுன்னு ஃப்ரெஷ் லுக்-ல வந்திருக்காங்கன்னு பேச்சு.
மொத்தத்துல பார்த்தா, 'வித் லவ்' படம் ரிலீஸ்க்கு முன்னாடியே நல்ல பல்ஸை உருவாக்கிட்டிருக்கு. அதுல முக்கிய காரணம் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொடுத்த அந்த சின்ன ரிவ்யூ தான். "வெரி நைஸ்"ன்னு தலைவர் சொன்ன ஒரே வார்த்தை, இப்போ படத்துக்கு பெரிய அட்வான்டேஜ். இனி பிப்ரவரி 6-ந் தேதி தியேட்டர்ல மக்கள் என்ன சொல்லப்போறாங்கன்னு தான் எல்லாரும் ஆவலோட காத்துக்கிட்டு இருக்காங்க.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications