For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்

By Staff
Google Oneindia Tamil News

அதிகளவு வருமானத்தைத் தரக்கூடியதும் குற்றவியல் சட்டத்திலிருந்து குறைந்த மட்டத்திலான ஆபத்தையும் கொண்ட பாலியல் அடிமைத்தொழில் அமெரிக்கா, கனடா ஐரோப்பிய நாடுகள் உள்ளடங்களாக 192 நாடுகளில் காணப்படுவதாக கூறப்படுகிறது. ஆபிரிக்கா, ஆசியா நாடுகளில் இருந்து கொள்வனவு செய்யப்பட்டு அல்லது கடத்தி வரப்படும் பெண்களும், சிறுவர்களுமே இத்தொழில் அதிகளவு ஈடுபடுத்தப்படுகின்றார்கள்.

புவியியல் அடிமைகள் அதிகளவில் பெருகிக் காணப்படுவதற்கான காரணம் அதிகளவு வருமானம் கிடைப்பதும் சட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ளும் வரையிலான பல ஓட்டைகள் இருப்பதாகும். இதனால் சர்வதேசரீதியில் இந்த அடிமைத் தொழில் வியாபாரம் அதிகரித்து வருகின்றது. புவியியல் அடிமைகள் பிரச்சினை, அடிப்படை மனித உரிமை மீறல் வரையறைக்குள் உள்ளகப்படுத்தி அதனுடன் இணைந்ததான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பல சந்தர்ப்பங்களாலும் பல தடங்கல்கள் சிக்கல்கள் எங்குமே காணப்படுகின்றன.

ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு கடத்திவரப்படும் பாலியல் அடிமைகளின் சரியான எண்ணிக்கையை சரியான முறையில் அறிய முடியாவிட்டாலும் கூட அமெரிக்க அரசின் புள்ளிவிபரங்களின்படி சுமார் 50 ஆயிரம் பெண்கள் பாலியல் அடிமைகளாக ஒவ்வொருவருடமும் கடத்திவரப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் எந்த நேரமாக இருக்கட்டும், நெருக்கடிமிக்க பஸ்களிலும், ரயில்களிலும் பெண்கள் பிரயாணம் செய்வது அவர்களுக்கு மகிழ்ச்சிகரமான அனுபவமொன்றை அளிக்காது. உடல்களை வேண்டுமென்று தொடுவதற்கு மேலதிகமாக, ஆபாசமான விதத்தில் அபிநயம் காட்டுவதும் அசௌகரியமாகத் தோற்றமளிப்பதும் பெண்களுக்கு அது ஒரு பயங்கரமான அனுபவமாகவே முடிகின்றது.

இது குறித்து அண்மையில் கணிப்பீடு ஒன்று இலங்கையில் நடத்தப்பட்டது. இது சம்பந்தமாக 200 பெண்கள் அளவீடு செய்யப்பட்டனர். இவர்களில் 188 பெண்கள் தனியார் பஸ்களில் பிரயாணம் செய்யும்போது வாழ்க்கையில் ஒரு தடவையாவது ஏதோ ஒரு வேளையில் தொந்தரவுக்குள்ளாகியுள்ளனர். இள வயதான பெண்களே, குறிப்பா 11க்கும் 20க்கும் உட்டபட்டவர்களே அதிகளவு ஊறுபடும் நிலையில் இருந்திருக்கின்றனர்.

குற்றமிழைப்பவர்கள் பெரிதுமே 35 வயதுக்கு மேற்பட்ட கௌரவமான ஆண்களாவார். பெண்கள் தனியாக பிரயாணம் செய்யும் போது அவர்கள் பலிகடாவாகின்றார்கள். ஒவ்வொருவருமே கணவருடன் அல்லது ஆண் நண்பர்களுடன் பிரயாணம் செய்யும் போது தொந்தரவு செய்யப்படவில்லை என நேர்முகங்காணப்பட்ட பெண்கள் தெரிவித்திருந்தனர்.

உடல்ரீதியாக தொடுதல் பொதுவானதாகும். ஆனால் பாலியல் பகிடிகள், உடல், உடைகள் பற்றிய கெட்ட கருத்துக்கள், முத்தமிடும் ஒலிகள், விசில் அடிக்கும் ஒலிகள் கூக்காட்டுதல் ஆகியவற்றையும் ஆண்கள் மேற்கொள்கின்றனர். அவர்கள் பாலியல் பொருட்களையும், புகைப்படங்களையும் காட்டுகின்றார்கள். பஸ்கள் மிகவும் நெருக்கடியாக இருக்கும் போது பெண்களையும், யுவதிகளையும் தொந்தரவு செய்வதற்கு அவர்களுக்கு அதிகளவுவாய்ப்பு கிட்டியது.

தரக்குறைவாக நடத்துதல் எனும் போது நவீன காலத்தில் e - mail, SMS, MMS, தொலைபேசி தபால் போன்ற எந்த ஒரு தொடர்பு சாதனத்தின் ஊடாக திரும்ப அவசியம் எதுவும் இல்லாமல் மீள, மீள தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்தல் அல்லது அச்சுறுத்தல். போன்றவையாகும். அத்துடன் குறிப்பிட்ட பெண்கள் மீது அவதூறு பேசுதல் அல்லது அவதூறு பரப்புதல்.

அவ்வாறு குறிப்பிட்ட நபர் பற்றிய அத்தகவல் மற்றும் சுய தகவல்களை பிறரின் பார்வைக்கு வைத்தல் இதற்காக இணையம் அல்லது ஏனைய தொடர்பு சாதனங்களைப் பயன் படுத்தல், தனியார் நிறுவனங்களை சேவைக்கமர்த்தி குறிப்பிட்ட நபர் குறித்து இரகசியத் தகவல்கள் திரட்டல், பின்தொடர்தல், நண்பர்களை தொடர்பு கொள்ளல், அயலவர்களை அல்லது அலுவலகத்தில் உடன் வேலை செய்பவர்களை தொடர்பு கொள்ளல் போன்றவையும் பாலியல் தொல்லைகளாக கணிக்கப்படுகின்றன. மேலும் இரகசியமான முறையில் தனிமையில் காணப்படக்கூடிய பெண்களை புகைப்படம் பிடித்தல், பெண்களின் அந்தரங்க விடயங்களை பகிரங்கப்படுத்தல் என்பனவும் வன்முறைகளே

போர் பாலியல் குற்றங்கள் அரசு இராணுவம் அல்லது ஆயுதமேந்திய குழு பாலியல் பலாத்காரம் ஈடுபடுதல் அல்லது விபசாரத்திற்கு கட்டாயப்படுத்தல் போன்றவை போர் பாலியல் குற்றங்களுக்குள் அடங்குகின்றன. மிகவும் பரந்த அளவில் நன்கு திட்டமிடப்பட்ட வகையில் நடைபெறும் இந்தவகை குற்றச்செயல்கள் மனிதாபிமானத்திற்கு எதிராக கணிக்கப்பட்டு சர்வதேச குற்றவியல் நிதிமன்றதில் தீர்ப்பு வழங்கப்படுகின்றது.
நகர்ப்புற வாழ்க்கையிலும் சரி, கிராமிய வாழ்க்கையிலும் சரி வன்முறைகளினால் கூடுதலான அளவுக்கு பாதிக்கப்படுபவர்கள் இளம் பெண்களே என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் உண்மையாகும்.

பாதிப்புகளுக்குள்ளாகிய அனேக பெண்கள் தமது பாதிப்புகள் குறித்து எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில்லை. பயம், சங்கடம் மற்றும் அந்நேரத்தில் சம்பவம் பற்றி சரிவர அறிந்திருக்காதிருந்தமை ஆகியனவே இதற்கான காரணமாகும். மேலும் பாதிக்கப்பட்டவர்களை சமூகம் ஏளனப்பார்வைக்கு உட்படுத்துவதும் பாதிப்புகள் வெளிவராமல் இருப்பதற்கு மற்றுமொரு காரணமாகும். இந்நிலையில் குற்றமிழைக்கப்பட்டவரிடமிருந்து விலகிச் செல்வதே பொதுவான நடவடிக்கையாக விளங்குகின்றது. ஒரு சிலர், விசேடமாக சற்று வயதானவர்கள் குற்றமிழைத்தவரை ஏசியுள்ளதுடன், அடித்தும் உள்ளனர்.

பெரும்பான்மையானவர்கள் சுயகௌரவம் காரணமாக மூடி மறைக்கின்றனர். இத்தகைய உதாசீனப் போக்குகள் காரணமாக குற்றமிழைத்தவர்கள் மேலும் மேலும் குற்றமிழைப்பவர்களகவே உள்ளனர். இதனாலேயே 'உலகிலுள்ள பெண்களில் மூவரில் ஒருவர் தனது வாழ்நாளில் ஏதாவது ஒரு வடிவிலான வன்முறையினால் பாதிக்கப்படுகிறார். வாழ்வை நிர்மூலமாக்கிச் சமூகங்களைச் சிதைக்கும் ஒரு கொள்ளை நோயாக பெண்களுக்கு எதிரான வன்முறை காணப்படுகின்றது."

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் உலகளாவிய ஒரு பாரதூரமான பிரச்சினையாகும். இதனை மிகவும் பரந்தளவில் நோக்க வேண்டும். கடந்த ஒரு சில தசாப்தங்களில் நிலைவரங்களில் சில வகை மேம்பாடுகளைக் காணக்கூடியதாக இருக்கின்ற போதிலும் இந்த நெருக்கடியின் கொடூரத்தன்மை இன்னமும் பெருமளவுக்கு ஒப்புக் கொள்ளப்படாததாகவே தொடர்ந்து இருந்து வருகிறது.

16-44 வயதுக்கு இடைப்பட்ட பெண்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு எதிரான வன்முறைகளே மரணத்துக்கும், உடல் ஊனமாதலுக்கும் முக்கிய காரணியாக அமைகின்றன. இனப்பெருக்க வயதிலுள்ள பெண்களைப் பொறுத்தவரை புற்று நோயைப் போன்று வன்முறைகளும் அவர்கள் மத்தியிலான மரணத்துக்கு முக்கிய காரணமாகின்றன.

உலக சுகாதார நிறுவனம் அண்மையில் மேற்கொண்ட ஆய்வொன்று உலகில் "வீதிவிபத்துகளையும், மலேரியா போன்ற நோய்களையும் விட பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அவர்களில் பெரும் எண்ணிக்கையானவர்களின் உடலாரோக்கியத்தை பாதிப்பதாக"த் தெரிவித்திருக்கிறது. வன்முறைகளை அனுபவிக்கும் பெண்கள் எச்.ஐ.வி.யின் தொற்றுக்கு இலக்காகும் ஆபத்தும் அதிகமாக இருப்பதாக தெரியவந்திருக்கிறது.

மேலும் கொலைக்கு ஆளாகும் பெண்களில் அரைவாசிப்பேர் அவர்களது தற்போதைய அல்லது முன்னாள் கணவர்களின் அல்லது துணைவர்களின் கைகளினாலேயே மரணத்தைத் தழுவுகின்றார்கள் என்று உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

'பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என்று வரும் போது உலகில் நாகரீகமான சமுதாயம் என்று எதுவுமேயில்லை" என்று ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அனான் சொன்னதை இச் சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும்.

முதல் பக்கம்....

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X