For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜனாதிபதியாக 5,49,442 ஓட்டுகள் தேவை.. காங்கிரசிடம் இருப்பது 4,46,345.. மிச்சத்துக்கு அலைகிறது!

By Chakra
Google Oneindia Tamil News

Pranabh Mukherjee
-ஏ.கே.கான்

லோக்சபா, ராஜ்யசபா எம்பிக்கள், மாநில சட்டசபைகளின் எம்எல்ஏக்கள் வாக்களித்துத் தான் ஜனாதிபதி, துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய வேண்டும்.

இதில் ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள் தொகையும் அந்த மாநிலத்தின் எம்எல்ஏக்கள் எண்ணிக்கையும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை வைத்தே ஒரு எம்எல்ஏவின் ஓட்டின் மதிப்பு நிர்ணயிக்கப்படும்.

உதாரணத்துக்கு 2011 சென்ஸஸ்படி தமிழகத்தின் மக்கள் தொகை 7.2 கோடி. தமிழக சட்டசபையில் உள்ள எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 234. இதனால் முதலில் 7.2 கோடியை 234 ஆல் வகுக்க வேண்டும். அப்படி வகுத்தால் வரும் மதிப்பு 307777. இதை 1000 ஆல் வகுக்க வேண்டும். அப்போது கிடைக்கும் மதிப்பு 307. இது தான் தமிழகத்தில் ஒரு எம்எல்ஏவின் ஓட்டின் மதிப்பு.

அதே போல எம்பிக்களின் ஓட்டுக்கும் மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களின் அனைத்து எம்எல்ஏக்களின் ஓட்டு மதிப்பை கூட்டி, அதை மொத்தமுள்ள 767 எம்பிக்களின் (லோக்சபா 534 + ராஜ்யசபா 233= 767) எண்ணிக்கையால் வகுத்தால் வரும் மதிப்பு தான் ஒரு எம்பியின் ஓட்டு மதிப்பாகும்.

அந்த வகையில் ஜனாதிபதி தேர்தலில் உள்ள மொத்த ஓட்டுக்களின் மதிப்பு 10,98,882 ஆகும். இதில் ஒருவர் ஜனாதிபதியாக வேண்டுமானால் குறைந்தபட்சம் அதில் பாதி ஓட்டுக்களை, அதாவது 5,49,442 வாக்குகளைப் பெற வேண்டும்.

இதில் காங்கிரஸ் கட்சியிடம் 3,30,945 வாக்குகள் உள்ளன. இது மொத்த வாக்குகளில் 30 சதவீதமாகும்.

காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளை எல்லாம் ஒன்றாக சேர்த்தால், 4,46,345 வாக்குகள் உள்ளன. இது மொத்த வாக்குகளில் 41 சதவீதமாகும். இதனால் வெற்றிக்குத் தேவையான 50 சதவீத வாக்குகள் காங்கிரஸ் கூட்டணியிடம் இல்லை.

இங்கு தான் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி போன்ற கட்சிகளின் பங்கு முக்கியமாகிறது.

இந்தக் கட்சிகளின் ஆதரவும் கிட்டத்தட்ட காங்கிரசுக்கு கிடைத்துவிட்ட நிலையில், அந்தக் கட்சியிடம் இப்போது 5,80,326 வாக்குகள் உள்ளன. அதாவது மொத்த வாக்குகளில் இது 53 சதவீதமாகும்.

தனது ஜனாதிபதி வேட்பாளரை வெற்றி பெற வைக்க 50 சதவீத வாக்குகளே தேவை என்ற நிலையில், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தள், தேவ கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் இன்னும் சிறிய கட்சிகளையும் வளைத்துவிட்டால் எளிதான வெற்றியைப் பெற முடியும்.

இவர்களுடன் இடதுசாரிகளின் ஆதரவும் சந்திரபாபு நாயுடு போன்றவர்களின் கிடைத்துவிட்டால் காங்கிரசுக்கு பிரச்சனையே இல்லை.

ஆனால், பாஜகவின் நிலையோ படுமோசம். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் மட்டுமல்லாமல் முலாயம் சிங், மாயாவதி, இடதுசாரிகள் மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோர் அனைவருமே சேர்ந்து ஆதரவு தந்தால் மட்டுமே 50 சதவீத ஓட்டுக்கள் கிடைக்கும்.

ஆனால், பாஜக கூட்டணியில் உள்ள பிகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், பெரும்பான்மையினர் ஆதரிக்கும் வேட்பாளரை ஆதரிக்கத் தயார் என்று கூறி பாஜக கூட்டணியில் கலகத்தை ஏற்படுத்தியுள்ளார். இதனால் இவரும் காங்கிரஸ் பக்கம் வர வாய்ப்பு அதிகம்.

இப்படிப்பட்ட சூழலில் கூட்டணியில் இருக்கும் அகாலிதளம் மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மட்டுமே நம்பி பாஜக தனது வேட்பாளரை நிறுத்த வேண்டும். இதனால் அந்தக் கட்சி 'சாஸ்திரத்துக்காகவே' போட்டியிடதாக இருக்குமே அல்லாமல் வெற்றி சாத்தியமில்லை.

English summary
Congress seems to have taken a head-start over the BJP in the presidential poll campaign as it deftly moves for a consensus among allies on probable candidates, Finance minister Pranab Mukherjee and Vice President Hamid Ansari, while the BJP is finding the going tough as its partners are yet to come on board.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X