நெஞ்சை உலுக்கும் சம்பவம்.. மியான்மரில் குழந்தைகள் உள்பட 30 பேர் ஏரித்துக்கொலை.. ராணுவம் அட்டுழியம்!
யாங்கூன்: மியான்மர் நாட்டில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ரீதியிலான ஆட்சி நடந்து வந்தது. ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறி அந்த நாட்டின் ராணுவம் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ராணுவம் அதிரடியாக ஆங் சான் சூகி ஆட்சியை கவிழ்த்து தங்கள் வசம் கைப்பற்றியது. தொடர்ந்து ஆங் சான் சூகி, அந்த நாட்டின் அதிபர் வின் மைண்ட் உள்பட 100க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்களை ராணுவம் தடுப்புக்காவலில் வைத்தது.

ராணுவ ஆட்சி
மியான்மர் மக்கள் ராணுவத்தின் செயலை துளி கூட ஏற்றுக் கொள்ளவில்லை. எங்களுக்கு நாங்கள் தேர்ந்தெடுத்த மக்கள் ஆட்சிதான் வேண்டும், அடக்குமுறை கொண்ட ராணுவ ஆட்சி வேண்டாம் என்று கோரி அவர்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்படி ஜனநாயக ரீதீயில் போராட்டம் நடத்தி வரும் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை அநியாயமாக கொன்று விதித்து வருகிறது ராணுவம்.

30-க்கும் மேற்பட்ட உடல்கள்
ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீதும், அங்குள்ள சிறுபான்மையினர் மக்கள் மீதும் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் மியான்மரின் கயாவில் குழந்தைகள் உள்பட 30-க்கும் மேற்பட்டவர்களை ராணுவம் கொன்று விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கயா மாநிலத்தில் ஹ்ப்ருசோ நகரத்தின் மோ சோ கிராமத்திற்கு அருகில் வாகனங்களில் எரிந்த நிலையில் 30-க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு
இவர்களில் குழந்தைகள், முதியவர்கள் பலர் உள்ளனர். இவர்கள் அனைவரும் மியான்மர் ராணுவத்தால் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டவர்கள் என்று 'காரென்னி' எனப்படும் மனித உரிமை அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது. ''மனித உரிமைகளை மீறும் மனிதாபிமானமற்ற மற்றும் கொடூரமான இந்த கொலையை வன்மையாகக் கண்டிக்கிறோம்'' என்று காரென்னி அமைப்பு பேஸ்புக் பதிவில் கூறியுள்ளது.

நெஞ்சை உலுக்கும் புகைப்படங்கள்
வாகனங்களில் எரிந்த நிலையில் உடல்களின் புகைப்படங்களை மனித உரிமைகள் குழு மற்றும் உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. கொல்லப்பட்ட அனைவரும் பயங்கரவாதிகள் என்றும் ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும் ராணுவ தரப்பில் இருந்து கூறப்பட்டதாக தெரிகிறது. மியான்மர் ராணுவத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல உள்ளூர் எதிர்ப்பு சக்திகள் உருவாகியுள்ளன. அவர்களை துரோகிகள் அல்லது பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி வரும் ராணுவம், அவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications