For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறுமியுடன் ராகுல் உள்ள போட்டோ! "அதிர்ச்சி ஸ்மைலி" போஸ்டை டெலிட் செய்தாரா பாஜக நிர்மல்? FACT CHECK

Google Oneindia Tamil News

சென்னை: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி சிறுமியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பாஜக ஐடி விங் செயலாளர் நிர்மல் குமார் பகிர்ந்து பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது. இந்த போஸ்ட் மட்டுமின்றி, ராகுல் அந்த சிறுமியுடன் இருக்கும் புகைப்படத்தை எமோஜி ஒன்றுடன் பகிர்ந்து, பின்பு அதை நிர்மல் குமார் டெலிட் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பாஜக தமிழ்நாடு மாநில ஐடி விங் தலைவர் சிடிஆர் நிர்மல் குமார், ராகுல் காந்தியை விமர்சனம் செய்து போஸ்ட் செய்துள்ளார். அந்த போட்டோவில் ராகுல் காந்தியுடன் இருக்கும் அந்த பெண் பிரியங்கா காந்தியின் மகள் மிராயா. ராகுல் காந்தி அவருக்கு தாய் மாமன் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த ராஜீவ்காந்தியின் நினைவிடத்தில் 2015 ஆம் ஆண்டு இவர்கள் குடும்பத்தோடு சந்தித்த போது இந்த படம் எடுக்கப்பட்டது. அந்த படம் எடுக்கப்பட்ட போது அவருக்கு வயது 13 மட்டுமே. மைனரின் புகைப்படத்தை இணையத்தில் இப்படி பரப்புவது தவறு என்ற போதிலும் பாஜக நிர்வாகி அதை பகிர்ந்து கிண்டல் செய்துள்ளார்.

யார் அந்த பெண்? ராகுல் போட்டோவை பகிர்ந்து பாஜக யார் அந்த பெண்? ராகுல் போட்டோவை பகிர்ந்து பாஜக "நிர்மல்" கமெண்ட்.. கதறு.. டெல்லியில் எகிறிய பிரஷர்

 என்ன சொன்னார்?

என்ன சொன்னார்?

நிர்மல் குமார் தனது போஸ்டில் "குழந்தைகளுடன் மருதாணி வைத்து விளையாடும் இந்த #pappu-வை கூட்டிக்கொண்டு யாத்திரை போகும் அந்த 10 பேரை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது.. " என்று குறிப்பிட்டு இருக்கிறார். ராகுல் காந்தி சிறுமி ஒருவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து நிர்மல் குமார் விமர்சனம் செய்துள்ளார். அவரின் இந்த விமர்சனம் சர்ச்சையாகி உள்ளது. கடுமையான எதிர்வினைகளை இந்த போஸ்ட் பெற்றுள்ளது.

 எதிர்ப்பு

எதிர்ப்பு

இந்த நிலையில் இணையம் முழுக்க பலர் நிர்மல் குமாரின் கருத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். பாலியல் ரீதியாக அவர் விமர்சனம் செய்துள்ளார் என்று குறிப்பிட்டு உள்ளனர். நேரடியாக பாலியல் ரீதியாக அவர் அட்டாக் செய்யவில்லை என்றாலும், மறைமுகமாக தாக்கி உள்ளார். அதோடு மைனர் பெண்ணின் (போட்டோ எடுக்கப்பட்ட போது அவரின் வயது 13) புகைப்படத்தை அவர் பகிர்ந்து உள்ளார். இது போக்சோ சட்டத்தின் கீழ் குற்றம் என்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கடுமையான விமர்சனம் செய்து வருகின்றனர்.

விளக்கம்

விளக்கம்

அதே சமயம் நிர்மல் குமார் தான் பாலியல் ரீதியாக விமர்சனம் எதுவும் செய்யவில்லை என்று கூறி உள்ளார். அதாவது, இதை வைத்து தவறான கருத்துக்களை பரப்புகிறார்கள். பொய்யான வாதங்களை வைத்து வருகிறார்கள். குழந்தைகளுடன் மருதாணி வைத்து விளையாடும் இந்த #pappu-வை கூட்டிக்கொண்டு யாத்திரை போகும் அந்த 10 பேரை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது, என்று மட்டும்தான் நான் குறிப்பிட்டேன் என்று நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார்.

பழைய போஸ்ட்

பழைய போஸ்ட்

இந்த போஸ்ட் மட்டுமின்றி, ராகுல் அந்த சிறுமியுடன் இருக்கும் புகைப்படத்தை அதற்கு முன்பே ஒரு முறை நிர்மல் குமார் பகிர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிர்ச்சி அளிக்கும் ஸ்மைலி ஒன்றை பகிர்ந்து ராகுலை கிண்டல் செய்வது போல நிர்மல் குமார் அந்த போஸ்டை பகிர்ந்து உள்ளார். இதை அவர் காலையில் பகிர்ந்து பின்னர் டெலிட் செய்துள்ளார். அதன்பின்பே "மருதாணி வைத்து விளையாடும் ராகுல்" என்று புதிய பதிவை போட்டுள்ளார். நிர்மல் குமார் முதல் பதிவை டெலிட் செய்துவிட்டாலும் அது இப்போதும் கூகுளில் கிடைக்கிறது. Googleல் "CTR Nirmal Kumar Rahul" என தேடினால் delete செய்த பதிவு வருகிறது. முதல் பதிவில் உள்ள எமோஜி காரணமாக தப்பான அர்த்தம் வருவதால் அதை நிர்மல் குமார் டெலிட் செய்துவிட்டதாக புகார்களை காங்கிரஸ் கட்சியினர் வைக்கின்றனர்.

Fact Check

வெளியான செய்தி

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, ஒரு சிறுமியுடன் இருக்கும் புகைப்படத்தை எமோஜி ஒன்றுடன் பகிர்ந்து, பின்பு அதை நிர்மல் குமார் டெலிட் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முடிவு

நிர்மல் குமார் இந்த போஸ்டை பகிர்ந்து உண்மைதான். அதிர்ச்சி அளிக்கும் ஸ்மைலி ஒன்றை பகிர்ந்து ராகுலை கிண்டல் செய்வது போல நிர்மல் குமார் அந்த போஸ்டை பகிர்ந்து உள்ளார். பின்னர் அதை நீக்கி உள்ளார்.

ரேட்டிங்

True
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
English summary
FACT CHECK: Did BJP Nirmal Kumar delete his older poster with emoji on Rahul Gandhi?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X