15 வருஷத்தில் தீரும் தங்கம்? பூமிக்கடியில் நடக்கும் 'மர்ம' விளையாட்டு! அச்சத்தில் உலக நாடுகள்.. ஏன்?
லண்டன்: "இன்னும் 15 வருஷத்துல தங்கம் எல்லாம் தீர்ந்துடுமாம்...", "யாராவது பெரிய தங்கச் சுரங்கத்தை கண்டுபிடிச்சா தங்கத்தோட விலை அதலபாதாளத்துக்கு போயிடுமா?", "பெரிய கம்பெனிகள் எல்லாம் ஒண்ணு சேர்ந்து விலையை ஏத்திடுவாங்களோ?" - இப்படி தங்கம் மேல முதலீடு செஞ்சிருக்கறவங்களுக்கு ஏகப்பட்ட கவலைகள் உண்டு. அதாவது உலக அளவில் சுரங்களில் உள்ள தங்கம் கொஞ்சம் கொஞ்சமாக காலியாக தொடங்கி உள்ளதாம்..
ஆனா, இந்த பயம் எதுவுமே தேவையில்லைனு உலக தங்க கவுன்சில் (WGC) ஒரு அதிரடி ரிப்போர்ட்டை ரிலீஸ் பண்ணியிருக்கு. 2025-ல தங்கம் உற்பத்தி உலக அளவுல சாதனை படைச்சிருந்தாலும், சந்தை ரொம்பவே 'ஸ்டெடியா' இருக்குதுங்கறதுதான் நிதர்சனம்.

1. அந்த '15 வருஷ' கணக்கு நிஜமா?
தங்கச் சுரங்கங்கள் இன்னும் 15 வருஷத்துல காலியாகிடும்னு ஒரு வதந்தி ஓடிக்கிட்டே இருக்கு. ஆனா, வேடிக்கை என்னன்னா... இந்த '15 வருஷம்'ங்கற கணக்கு கடந்த 30 வருஷமா அப்படியே தான் இருக்கு!
எப்படி சாத்தியம்?
தங்கத்தோட விலை ஏற ஏற, முன்னாடி லாபமில்லாத இடமா தெரிஞ்ச சுரங்கங்கள் இப்போ லாபம் தரக்கூடியதா மாறிடுது. புது டெக்னாலஜி மூலமா பழைய சுரங்கங்கள்ல இருந்தும் அதிக தங்கத்தை எடுக்க முடியுது. இதனால, ஒரு பக்கம் தோண்டி எடுத்தாலும், மறுபக்கம் புதுசு புதுசா 'இருப்பு' (Reserves) ஏறிக்கிட்டே இருக்கு.
2. தங்கம் அழியாத செல்வம்!
மத்த கனிமங்கள் மாதிரி தங்கம் ஒருமுறை பயன்பாட்டுக்கு அப்புறம் அழிஞ்சு போகாது.
உதாரணத்துக்கு: பெட்ரோலை எரிச்சா போச்சு. ஆனா தங்கம் அப்படி இல்ல. பூமியில இதுவரை தோண்டி எடுக்கப்பட்ட அத்தனை தங்கமும் ஏதோ ஒரு நகையாவோ, கட்டியாவோ இல்ல மொபைல் போனுக்குள்ள ஒரு சின்ன சிப்பாவோ இன்னமும் இருக்கு.
ஒருவேளை சுரங்கங்கள்ல வேலை நின்னாலும், பழைய நகைகளை உருக்கி வர்ற 'ரீ-சைக்கிள்' தங்கம் உடனே மார்க்கெட்டுக்கு வந்துடும். இது விலை தாறுமாறா ஏறாம பாத்துக்கற ஒரு 'செக் டேம்' மாதிரி செயல்படுது.
3. புது சுரங்கம் கண்டுபிடிச்சா விலை குறையுமா?
"நாளைக்கே ஒரு மலையளவு தங்கத்தை கண்டுபிடிச்சா விலை சரிஞ்சுடுமே?" - இது பலரோட சந்தேகம். ஆனா, ஒரு தங்கச் சுரங்கத்தை கண்டுபிடிச்சு அதுல இருந்து தங்கத்தை வெளிய கொண்டு வர குறைஞ்சது 10 வருஷம் ஆகும். அதுக்குள்ள மார்க்கெட் அந்த செய்தியை உள்வாங்கி பழகிடும். அதனால திடீர்னு விலை குறைய வாய்ப்பே இல்லை.
4. கம்பெனிகள் கூட்டு சேர்ந்து விலையை ஏத்த முடியுமா?
உலகத்துல இருக்குற டாப் 10 தங்க நிறுவனங்கள் மொத்த உற்பத்தியில வெறும் 27% மட்டும்தான் கைவசம் வச்சிருக்காங்க. மீதி 70% மேல சின்ன சின்ன சுரங்க தொழிலாளர்கள் கையில தான் இருக்கு. இவங்க எல்லாரும் ஒண்ணா சேர்ந்து விலையை கட்டுப்படுத்துறதுங்கறது சட்டப்படியும் முடியாது, நடைமுறைக்கும் சாத்தியமில்லை.
சுருக்கமா சொல்லப்போனா, தங்கம் தட்டுப்பாடாகிடும்னு பயப்பட வேண்டாம். பூமிக்கடியில நாம நினைச்சதை விட அதிகமாவே தங்கம் ஒளிஞ்சுருக்கு. 'ஈஸியா' கிடைக்கிற தங்கம் குறையலாமே தவிர, விலை ஏறும்போதோ இல்ல டெக்னாலஜி வளரும்போதோ தங்கம் கிடைச்சுக்கிட்டே தான் இருக்கும்!
-
தங்கம் ரொம்பவே ரிஸ்க்.. "இந்த" கோல்ட் பக்கமே போக வேண்டாம்.. உடைத்து பேசிய ஆனந்த் சீனிவாசன் -
நிலத்தைத் தோண்டும்போது தங்கம், சிலைகள் கிடைத்தால் செய்ய வேண்டியவை? கவனிக்காவிட்டால் ஜெயில் நிச்சயம் -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
சர்வதேச தங்க மார்கெட்டில் பூகம்பம்.. 25 ஆண்டுகளில் முதல்முறையாக தங்கத்தை விற்று தள்ளும் ரஷ்யா! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்?












Click it and Unblock the Notifications