இதுவரை திறக்காத கதவை.. உடைத்து திறந்த தங்கம்.. 50 வருடத்தில் நடக்காத சம்பவம்.. இப்போ நடக்குது!
அமெரிக்க பணப்புழக்க விநியோகத்துடன் ஒப்பிடுகையில், தங்கம் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தகைய நிலை கடைசியாக 2011 ஆம் ஆண்டிலும், அதற்கு முன்பு 1970 களிலும் காணப்பட்டது. அமெரிக்க டாலருடன் ஒப்பிடும் போது குறிப்பிட்ட மதிப்பை தங்கம் தாண்டாது என்று வாதம் வைக்கப்படும்.
அதாவது செண்டிமெண்ட் ரீதியாக தங்கம் சில மதிப்பை தாண்டாது என்று கூறப்படும். அதை தற்போது தங்கம் உடைக்க தொடங்கி உள்ளது. 1970 களில், பல ஆண்டுகளாக மந்தமாக இருந்த தங்கத்தின் விலை, ஒரு அவுன்ஸ் 700 டாலர்களைத் தாண்டி வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்தது. அதற்கு முன் வரை தங்கம் எல்லாம் 700 டாலரை தாண்டாது என்று வாதம் வைக்கப்பட்டது.

2011 இல், தங்கம் சுமார் 1,800 டாலர்களுக்கு மேல் வர்த்தகமானது. அப்போது தங்கம் 1800 டாலரை தாண்டாது என்று கூறப்பட்டது. ஆனால் அதுவும் பின்னர் மாற்றப்பட்டது. இன்று, ஒரு அவுன்ஸ் தங்கம் கிட்டத்தட்ட 4,500 டாலராக உள்ளது. இந்த மதிப்பை தங்கம் தாண்டாது என்று கூறப்பட்ட நிலையில் அதையும் தங்கம் தாண்டி உள்ளது
விடாமல் உயர்ந்த தங்கம் மதிப்பு
2025 ஆம் ஆண்டில் தங்கம் சுமார் 70 சதவீதம் உயர்ந்து, முதலீட்டாளர்களின் வலுவான ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக இருந்த மிகப்பெரிய சென்டிமென்டை தங்கம் உடைத்து உள்ளது.
வரலாற்று ரீதியாக, இந்த நிலை ஒரு வலுவான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. அதாவது, தங்கம் இந்த நிலைக்கு அப்பால் உயர்வது கடந்த காலங்களில் சவாலாக இருந்தது. ஆனால் இனி இது போன்ற செண்டிமெண்ட் தடைகள் இருக்காது என்கிறார்கள். தங்கத்தின் அடுத்த டார்கெட் ஒரு அவுன்ஸ் 6000 டாலர் என்று கூறப்படுகிறது. முக்கியமாக 2025 ஆம் ஆண்டைத் இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம் எதிர்பார்க்காத அளவிற்கு உயர்ந்தது. அந்த வகையில் 2025ம் ஆண்டில் மாதம் மாதம் தங்கம் எவ்வளவு உயர்ந்தது இன்று பார்க்கலாம்.
அதேபோல் கடந்த ஜனவரியில் தங்கம் வாங்கியவர்களுக்கு இப்போது எவ்வளவு லாபம் கிடைத்திருக்கும் என்றும் பார்க்கலாம்.
ஜனவரி பிப்ரவரி தங்கம் விலை
தங்கம் கடந்த ஜனவரி 2025ல் ஒரு கிராமுக்கு சுமார் ₹7,500இல் தொடங்கியது. உலகளாவிய பணவீக்கக் கவலைகள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மையால் முதலீட்டாளர்கள் கவனமாக வர்த்தகம் செய்தனர். இதனால் டாலர் விலை சரிந்து தங்கம் தொடர்ந்து உயர்ந்தது. பிப்ரவரியில், தங்கம் ஒரு கிராமுக்கு ₹8,100ஐ நெருங்கியது. பாதுகாப்பான முதலீட்டுத் தேவை இதற்கு முக்கிய காரணம்.
டிசம்பர் விலை
2025 ஆம் ஆண்டின் முடிவில், ஒரு கிராம் தங்கம் கிட்டத்தட்ட ₹13,400ஐ எட்டி, பத்தாண்டுகளில் இல்லாத வலுவான வளர்ச்சியை தங்கம் பதிவு செய்தது. ஜனவரியில் ₹7,500க்கு ஒரு கிராம் தங்கம் வாங்கி, டிசம்பர் இறுதி வரை வைத்திருந்த ஒருவருக்கு, அதன் மதிப்பு ₹13,400 ஆக உயர்ந்தது. இது ஒரு கிராமுக்கு ₹5,900 லாபம் மற்றும் சுமார் 78 சதவிகித வருமானத்தை ஈட்டித் தந்தது.
2025 ஆம் ஆண்டில், தங்கம் இந்திய முதலீட்டாளர்களுக்கு ஒரு பாதுகாப்பான மற்றும் நம்பகமான நீண்டகால சொத்து என்பதை மீண்டும் ஒருமுறை உறுதியுடன் நிரூபித்தது. அதாவது நான்தான் பாஸ்.. மத்த முதலீடு எல்லாம் தூசு என்று தங்கம் பெரிய பாடம் எடுத்துள்ளது.
-
ஒரு வழியாக டிரம்ப் எடுத்த முடிவு.. ஈரான் போரில் மாபெரும் ட்விஸ்ட்.. சஸ்பென்ஸ் வைக்கும் அமெரிக்கா! -
அமெரிக்காவால் ஏன் ஈரான் போரில் ஜெயிக்க முடியவில்லை.. உலகத்தையே முடக்கிய இஸ்ரேலின் தவறு -
சொந்த செலவில் சூனியம்.. 2022க்கு பிறகு அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி! டிரம்புக்கு எதிராக மக்கள் -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
கோதாவில் இறங்கும் இங்கிலாந்து.. 35 நாடுகளை திரட்டி ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு? எகிறும் டென்ஷன் -
"ஹார்முஸை திறக்கவில்லை என்றால்.. பேரழிவு நிச்சயம்!" ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த டிரம்ப்! -
வந்த வேலை முடிந்தது.. 2-3 வாரத்தில் குட் நியூஸ்! ஈரான் குறித்து பேசிய டிரம்ப்! இந்தியா தப்பிக்குமா? -
ஈரான் ஈரலை குறிவைக்கும் ட்ரம்ப்..கார்க்கை சுத்துப் போட்ட ‘இரும்பு அரக்கன்கள்’.. ரெடியான பாராசூட் படை -
வளைகுடாவில் அமெரிக்காவுக்கு இன்னொரு தலைவலி.. ஈராக்கில் சர்வதேச செய்தியாளர் கடத்தல்.. ஷாக் வீடியோ -
இந்தியர்களுக்கு பெரிய ஆப்பு.. H-1B விசா ரூல்ஸை மொத்தமாக மாற்றும் டிரம்ப்! இது தேவையில்லாத வேலையாச்சே -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப்












Click it and Unblock the Notifications