Gold rate today: மீண்டும் மீண்டுமா.. ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. நகை பிரியர்களுக்கு இடி
சென்னை: தங்கம் விலை (Gold rate) கடந்த 6 நாட்களாக சரிந்து வந்த நிலையில் இன்று திடீரென உயர்ந்துள்ளது. கடந்த ஆறு நாட்களில் மட்டும் தங்கம் விலை சென்னையில் சவரனுக்கு ரூ.4,500 குறைந்து இருந்தது. இப்படி தினம் தினம் சர்ப்ரைஸ் கொடுத்து வந்த தங்கம் விலை இன்று பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இன்று காலையில் மட்டும் சென்னையில் சவரனுக்கு ரூ.800 அதிகரித்த நிலையில் மாலையில் மேலும் ரூ.800 அதிகரித்தது.
ஒரே நாளில் இருமுறை தங்கம் விலை உயர்ந்து நகை பிரியர்கள் தலையில் இடியை இறக்கியுள்ளது. வெள்ளி விலையும் காலை மாலை என இரு முறை உயர்ந்துள்ளது.
தங்கம் விலையானது உச்சம் தொட்டு தற்போது சற்று குறைந்து வருகிறது. கடந்த மாதம் 17 ஆம் தேதி தங்கம் விலையானது வரலாற்றில் இல்லாத அளவாக ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்தை தாண்டி விற்பனை ஆனது.

தங்கம் விலை
இதனால் கலக்கமடைந்த நகை பிரியர்கள் தங்கத்தை இனி கனவில் தான் வாங்க முடியுமோ என அதிர்ச்சியடைந்தனர். கொஞ்சம் விட்டால் ஒரு சவரன் ரூ.1 லட்சத்திற்கு சென்று இருக்கும். ஆனால் தற்போது தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளது. கடந்த மாதத்தோடு ஒப்பிடும் போது சுமார் 5 ஆயிரம் குறைந்துள்ளது.
இதனால் தொடர்ந்து இன்னும் தங்கம் குறையும் வாங்கிவிடலாம் என நினைத்தவர்களுக்கு மீண்டும் ஷாக் கொடுத்தது. பின்னர் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் விலை இருந்து வந்தது. அதன்பிறகு கடந்த சில நாட்களாகவே தங்கம் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. இதில் மீண்டும் தங்கம் விலையானது ரூ.95 ஆயிரத்தை தாண்டியது.
தொடர்ந்து சரியும் தங்கம் விலை
இதனால் தங்கம் விலை மீண்டும் உச்சம் தொட்டு விடும் என நகை பிரியர்கள் அச்சப்பட்ட நிலையில், அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக தங்கம் விலையானது சரிய தொடங்கியது. கடந்த 13 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.95,200க்கு அதிகரித்து இருந்த நிலையில் அதன் பிறகு தொடர்ந்து 6 நாட்களாக விலை குறைந்துள்ளது.
அதன்படி நேற்று முன் தினம் சென்னையில் ஒரு சவரன் தங்கமானது ரூ.92,320- க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று ரூ.1,120 குறைந்து ரூ.91,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.140 குறைந்து ரூ.11,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் இன்று விலை குறையுமா என எதிர்பார்க்கப்பட்டது.
ஒரே நாளில் இருமுறை உயர்வு
ஆனால் இன்று தங்கம் விலை அதிர்ச்சி கொடுத்துள்ளது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று காலையில் ஒரு சவரன் தங்கம் ரூ.800 அதிகரித்து ரூ.92,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.100 அதிகரித்து ரூ.11,500-க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து ஆறு நாட்களாக விலை குறைந்து வந்த நிலையில் இன்றும் அதிகரித்து இருந்தது.
இந்த நிலையில் இன்று மாலையில் மேலும் ரூ.800 அதிகரித்துள்ளது. இதனால் இன்று ஒரே நாளில் தங்கம் விலையானது ரூ.1600 அதிகரித்து ஒரு சவரன் ரூ.92,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் மாலையில் ரூ.100 அதிகரித்து ரூ.11,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் அதிகரிப்பு
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் தினம் தினம் உச்சம் தொட்டது. இதுவரை இல்லாத அளவாக ஒரு கிராம் ரூ.180 ஐ தாண்டி விற்பனை ஆனது. இதனால் வெள்ளி மீது பலரது கவனமும் திரும்பியது. எனினும் கடந்த 3 நாட்களாக வெள்ளியின் விலையும் குறைந்து வந்தது. அதன்படி வெள்ளி விலை தொடர்சியாக சரிந்து நேற்று ஒரு கிராம் ரூ.170-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் தங்கம் விலை உயர்ந்ததை போல் வெள்ளி விலையும் உயர்ந்தது. சென்னையில் இன்று காலையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.3 அதிகரித்து ரூ.173-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் மாலையில் மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி சென்னையில் இன்று மாலை ரூ.3 அதிகரித்து ரூ.176-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களின் தங்கம் விலை நிலவரம்:
19.11.2025 - ஒரு சவரன் ரூ.92,800 (இன்று மாலை)
19.11.2025 - ஒரு சவரன் ரூ.92,000 (இன்று காலை)
18.11.2025 - ஒரு சவரன் ரூ.91,200 (நேற்று)
17.11.2025 - ஒரு சவரன் ரூ.92,320
16.11.2025 - ஒரு சவரன் ரூ.92,400
15.11.2025 - ஒரு சவரன் ரூ.92,400
14.11.2025 - ஒரு சவரன் ரூ.93,920
14.11.2025 - ஒரு சவரன் ரூ.94,720
13.11.2025 - ஒரு சவரன் ரூ.95,200
12.11.2025 - ஒரு சவரன் ரூ.92,800
11.11.2025 - ஒரு சவரன் ரூ.93,600
10.11.2025 - ஒரு சவரன் ரூ.91,840
09.11.2025 - ஒரு சவரன் ரூ.90,400
08.11.2025 - ஒரு சவரன் ரூ.90,400
07.11.2025 - ஒரு சவரன் ரூ.90,160
06.11.2025 - ஒரு சவரன் ரூ.90,560
06.11.2025 - ஒரு சவரன் ரூ.90,000
05.11.2025 - ஒரு சவரன் ரூ.89,440
04.11.2025 - ஒரு சவரன் ரூ.90,000
03.11.2025- ஒரு சவரன் ரூ.90,800
02.11.2025- ஒரு சவரன் ரூ.90,480
01.11.2025- ஒரு சவரன் ரூ.90,480
31.10.2025- ஒரு சவரன் ரூ.90,400
30.10.2025- ஒரு சவரன் ரூ.90,400
29.10.2025- ஒரு சவரன் ரூ.90,600
28.10.2025- ஒரு சவரன் ரூ.88,600
27.10.2025- ஒரு சவரன் ரூ.91,600
26.10.2025- ஒரு சவரன்: ரூ.92,000
25.10.2025- ஒரு சவரன்: ரூ.92,000
24.10.2025- ஒரு சவரன் ரூ.92,320
23.10.2025- ஒரு சவரன் ரூ.92,000
22.10.2025- ஒரு சவரன் ரூ.92,000
21.10.2025 - ஒரு சவரன் ரூ.92,320
21.10.2025 - ஒரு சவரன் ரூ.93,600
20.10.2025- ஒரு சவரன் ரூ.96,000
19.10.2025 - ஒரு சவரன் ரூ.95,360
18.10.2025 - ஒரு சவரன் ரூ.96,000
17.10.2025- ஒரு சவரன் ரூ.97,600
16.10.2025 - ஒரு சவரன் ரூ.95,200
15.10.2025 - ஒரு சவரன் ரூ.94,880
14.10.2025 - ஒரு சவரன் ரூ.94,600
13.10.2025 - ஒரு சவரன் ரூ.92,640
13.10.2025 - ஒரு சவரன் ரூ.92,200
12.10.2025 - ஒரு சவரன் ரூ.92,000
11.10.2025 - ஒரு சவரன் ரூ.92,000
11.10.2025 - ஒரு சவரன் ரூ.91,400
09.10.2025 - ஒரு சவரன் ரூ.91,400
09.10.2025 - ஒரு சவரன் ரூ.91,200
08.10.2025 - ஒரு சவரன் ரூ.91,080
08.10.2025 - ஒரு சவரன் ரூ.90,400
07.10.2025 - ஒரு சவரன் ரூ.89,600
06.10.2025 - ஒரு சவரன் ரூ.89,000
06.10.2025 - ஒரு சவரன் ரூ.89,000
05.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600
04.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600
03.10.2025 - ஒரு சவரன் ரூ.87,200
03.10.2025 - ஒரு சவரன் ரூ 86,720
02.10.2025 - ஒரு சவரன் ரூ 87,600
02.10.2025 - ஒரு சவரன் ரூ 87,040
01.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600
01.10.2025 - ஒரு சவரன் ரூ.87,120
30.09.2025 - ஒரு சவரன் ரூ. 86,880.
-
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
இங்கிட்டு ஹரி நாடார் மாதிரி..அங்கிட்டு அவரு! கழுத்து வலிக்க வலிக்க தங்கநகைகள்! ஒரே நாளில் உடைத்த ஐடி -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
தாள்ளாடுதே தங்க சந்தை.. தாறுமாறாக விலை இருப்பது ஏன்? இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கும்? -
தங்கம் ரொம்பவே ரிஸ்க்.. "இந்த" கோல்ட் பக்கமே போக வேண்டாம்.. உடைத்து பேசிய ஆனந்த் சீனிவாசன் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம்












Click it and Unblock the Notifications