Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Gold Rate Today: ஆட்டம் 2.0ஐ ஆரம்பித்த தங்கம்.. வாரத்தின் முதல் நாளே எக்குத்தப்பாக எகிறியது! பொதுமக்கள் அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமெரிக்காவில் டிரம்ப் விதித்த வரிகள் செல்லாது என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. ஒரு பக்கம் நீதிமன்றத்தை விமர்சித்து டிரம்ப் உலக நாடுகள் வரிகளை அறிவித்துள்ள நிலையில், அது தங்கத்தின் விலையை நேரடியாகவே பாதிக்கிறது. இதனால் இன்றைய தினம் சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.1440 உயர்ந்துள்ளது.

கடந்த ஓராண்டாகவே தங்கம் விலை எந்தளவுக்கு உயர்ந்து உச்சம் தொட்டது என்பதைத் தனியாகச் சொல்லத் தேவையில்லை.. ஒரே ஆண்டில் மட்டும் தங்கம் விலை 75%க்கு மேல் எகிறி அதிர்ச்சி கொடுத்திருந்தது. இந்த மாதமும் கூட ஜனவரியில் ஆரம்பித்து தங்கம் விலை உச்சம் தொட்டது.

Gold Price Gold

தங்கம்

ஆனால் பிப்ரவரி தொடங்கியதுமே சீறி பாய்ந்த தங்கம், சட்டென பிரேக் அடித்தது போல நின்றுவிட்டது. அதன் பிறகு தங்கம் விலையில் பெரிய ஏற்றமோ இறக்குமோ இல்லாமல் இருந்தது. இரண்டு நாள் ஏறினால் அடுத்த நாள் இறங்குவது என்று ரூ.1400- 14700 என்ற ரேஞ்சிலேயே தங்கம் விலை சுற்றிச் சுற்றி இருந்தது. இதனால் விலையை ஓரளவுக்குக் கணிக்க முடிந்தது.

இந்தச் சூழலில் தான் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை டிரம்பிற்கு மிகப் பெரிய ஒரு அடி விழுந்தது. அதாவது டிரம்ப் கடந்தாண்டு உலக நாடுகள் மீது வரிகளை அறிவித்திருந்தது அனைவருக்கும் தெரியும். அந்த வரியைச் செல்லாது என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. அதாவது வரி விதிக்கும் அதிகாரம் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கே இருப்பதாகவும் அதிபருக்கு இல்லை எனச் சொல்லி அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது.

அமெரிக்க வரிகள்

இருப்பினும், டிரம்ப் வழக்கம் போல இதை ஏற்கவில்லை. நீதிமன்றம் மீதே பாய்ந்தார். காட்டமான விமர்சனங்களை முன்வைத்த டிரம்ப், உலக நாடுகள் மீது புதிதாக வரிகளை அறிவித்தார். முதலில் 10% என வரிகளை அறிவித்த நிலையில், பிறகு 15%ஆக அது உயர்த்தப்பட்டது. இப்போது உலக நாடுகள் எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்பதில் தெளிவில்லாத சூழலே நிலவுகிறது.

இன்றைய விலை

இது சர்வதேச தங்க மார்கெட்டில் நேரடியாகத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இன்று காலை 9.30 மணியளவில் சர்வதேச மார்கெட்டில் தங்கம் விலை 5162 ஆக உள்ளது. அதாவது 1.16% உயர்ந்துள்ளது. இதுவே இன்று இந்தியச் சந்தையிலும் எதிரொலித்தது. வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை அதிர்ச்சி கொடுத்துள்ளது. ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.1440 உயர்ந்து ரூ.1,18,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.180 உயர்ந்து ரூ.14,860க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.300க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை நிலவரம்

22.02.2026 - ஒரு சவரன் ரூ.1,18,880 (இன்று)

22.02.2026 - ஒரு சவரன் ரூ.1,17,440 (நேற்று)

21.02.2026 - ஒரு சவரன் ரூ.1,17,440

20.02.2026 - ஒரு சவரன் ரூ.1,15,360

19.02.2026 - ஒரு சவரன் ரூ.1,16,000

18.02.2026 - ஒரு சவரன் ரூ.1,13,840

17.02.2026 - ஒரு சவரன் ரூ.1,14,560

16.02.2026 - ஒரு சவரன் ரூ.1,15,520

15.02.2026 - ஒரு சவரன் ரூ.1,16,800

14.02.2026 - ஒரு சவரன் ரூ.1,16,800

13.02.2026 - ஒரு சவரன் ரூ.1,15,200

12.02.2026- ஒரு சவரன் ரூ.1,16,800

11.02.2026 - ஒரு சவரன் ரூ.1,18,320

10.02.2026 - ஒரு சவரன் ரூ.1,16,640

09.02.2026 - ஒரு சவரன் ரூ.1,17,200

08.02.2026 - ஒரு சவரன் ரூ.1,15,360

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+