மணல் கொள்ளையர்கள் மீது விதிப்படி உரிய நடவடிக்கை- தூத்துக்குடி புதிய கலெக்டர்

தூத்துக்குடி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டுவந்த விவி மினரல்ஸ் தனியார் மணல் குவாரிகளில் வருவாய்த்துறை, கனிமவளத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆஷிஷ்குமார் திடீரென்று பணிமாறுதல் செய்யப்பட்டார்.
அவருக்கு பதிலாக அரியலுர் கலெக்டராக இருந்த ரவிக்குமார் புதிய கலெக்டராக நியமனம் செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தின் 23வது கலெக்டராக இன்று பொறுப்பேற்ற ரவிக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
அரசின் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் உடனடியாக முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நான் மாவட்ட நிர்வாகத்தை நியாயமான முறையிலும், வெளிப்படையாகவும், ஆர்ப்பரிப்பு இல்லாமலும் சிறப்பாக நடத்துவேன். மாவட்டத்தில் நடந்துள்ள மணல் கொள்ளையில் தவறு செய்தவர்கள் மீது அரசின் விதிமுறைகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சமூகத்தில் பெரிய மனிதர்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அரியலூர் மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களாக கலெக்டராக சிறப்பாக பணியாற்றிய நான், அதேபோன்று தூத்துக்குடி மாவட்டத்திலும் சிறப்பாக பணியாற்றுவேன். நான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தனிஅலுவலராக பணியாற்றிய காரணத்தினால் மாவட்டத்தை பற்றி எனக்கு நன்றாக தெரியும் என்றார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications