நிலா யாருங்க...அவளை இந்த நீலாம்பரி மருமகளாக்க துடிக்கறாங்களே... ஏன்?
சென்னை: சன் டிவியில் நிலா சீரியல் நல்லாத்தான் இருக்கு.நிலாவும் அம்மான்னுதான் கூப்பிடறா.. ரெண்டாவது பொண்ணு ஸ்வேதாவும் அம்மான்னுதான் கூப்பிடறா. அம்மா ஏன் பாரபட்சம் பார்க்கறாங்க...
ஸ்வேதா கோடீஸ்வரன் வீட்டுக்கு மருமகளா போகணும்னு அம்மா ஆசைப்படறாங்க. ஆனா, நிலா வீட்டு வேலை செய்யணும், வெளிநாட்டுல போயி படிக்க கூடாதுன்னு சொல்றாங்க. எதுக்கு நிலாவுக்கு மட்டும் பாரபட்சம் பார்க்கறேன்னு அப்பா கேட்கறார்.
ஏன்னு உங்களுக்கு தெரியாது..தெரியாதுன்னு கேட்டுட்டு அம்மா போயிடறாங்க. அப்பாவின் நினைவில் பச்சிளம் குழந்தையை இப்போதைய மனைவிதான் கொடுத்துட்டு கோபமாக போனதை காமிக்கறாங்க.

ஸ்வேதாவும்
நிலாவும் ஸ்வேதாவும் காலேஜில் படிக்கறாங்க. ஸ்வேதாவுக்கு முத்தம் கொடுத்து அனுப்பும் அம்மா தனக்கு மட்டும் அப்படி செய்வதில்லைன்னு அம்மாகிட்ட ஏக்கமா கேட்கறா.அப்போது ஸ்வேதா வழுக்கி விழ, உன் பொறாமைதாண்டி இவ வழுக்கி விழுந்துட்டான்னு அம்மா சொல்றாங்க.

கார்
கல்லூரி விட்டு வரும் நிலா மீது கார் மோதிவிடுகிறது. அதிலிருந்து இறங்கியவன் கோடீஸ்வரி நீலாம்பரியின் மகன் அசோக். சாரிங்கன்னு சொல்லி விழுந்த நிலாவுக்கு கை கொடுக்கிறான்.அவள் இவனையே பார்த்திருக்க.. அவன் இவளையே பார்த்திருக்க, திடீரென்று இன்னொரு கை அசோக்கின் கையைத் தட்டி விடுது.

நிலாவை
கல்யாணமாகாத ஒரு பொண்ணு கையை பிடிக்க சொல்றியே.. எவளாவது பிடிப்பாளாடான்னு கேட்கறான், நிலாவின் பின்னாலிருந்து ஒருவன். நீங்க யாருன்னு கேட்கறான் இவன், நான் கார்த்திக்டா, இவளை கட்டிக்க போறவன்னு சொல்றான் அவன்.சாரிங்க தெரியாம லேசா மோதிருச்சுன்னு சொல்ல, இவன் சண்டைக்கு போக, நிலா கார்த்திக்கை சமாதானப்படுத்தி அழச்சுகிட்டு போறா.

நிலாவை
நிலாவின் மாமாவிடம் ஒரு சாதாரண குடும்பத்திலிருந்து ஒரு பொண்ணு வேணும்னு கேட்கறீங்க நீலாம்பரி. நிலாவின் போட்டோவை அவனது அக்கா அதாவது நிலாவின் அம்மாவிடம் படத்துடன் சம்மதமும் வாங்கி நீலாம்பரியிடம் தர்றான். நீலாம்பரிக்கு பெண் பிடித்து போக கல்யாணம் பண்ணிடலாம்னு சொல்றாங்க நீலாம்பரி

நீலாம்பரி ஏன்?
நிலாவை வசதியான இடத்துல கல்யாணம் கட்டி கொடுத்துட்டா, ஸ்வேதாவுக்கு தானாக கோடீஸ்வர மாப்பிள்ளை கிடைப்பான்னு நிலாவின் அம்மாவும் ஒத்துக்கறாங்க.. அப்போ நிலா யாரு? நீலாம்பரி அவளை மருமகளாக்கத் துடிக்கறாங்களே ஏன்?
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications