ஊதியம் ரூ.50,000.. கோ ஆப்டெக்ஸில் வேலை.. எழுத்து தேர்வு கிடையாது.. நேர்க்காணலில் பங்கேற்பது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோ ஆப்டெக்ஸில் எழுத்து தேர்வின்றி நேர்க்காணல் முறையில் ரூ.50 ஆயிரம் மாத சம்பளத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் அண்டை மாநிலங்களிலும் பணியாற்ற ஆட்சேர்ப்பு நடக்கிறது.

தமிழக கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் (TN CO-Optex) நிறுவனம் அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழ்நாட்டிலுள்ள பாரம்பரிய கைத்தறி நெசவாளர்களை ஒருங்கிணைக்கும் கூட்டுறவு அமைப்பாக இது செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் தமிழக கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கமான கோ-ஆப்டெக்ஸில் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களில் Marketing Manager பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

 காலியிடங்கள் எவ்வளவு?

காலியிடங்கள் எவ்வளவு?


கோ-ஆப்டெக்ஸ் சார்பில் மொத்தம் 11 Marketing Manager பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதன்படி சென்னை, கடலூர், கோவை, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, வேலூர், கர்நாடக தலைநகர் பெங்களூர், மகாராஷ்டிரா தலைநகர் மும்பை, ஆந்திர மாநிலம் விஜயவாடா ஆகிய இடங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

 கல்வி தகுதி- வயது வரம்பு

கல்வி தகுதி- வயது வரம்பு

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி, பல்கலைக்கழங்களிஙல் எம்பிஏ(மார்க்கெட்) படிப்பை முழுநேரமாக முடித்திருக்க வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். வயதானது 15.09.2022 தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.

 மாத ஊதியம்

மாத ஊதியம்

இந்த பணியானது ஒரு ஆண்டு வரையிலான ஒப்பந்த பணியாகும். இதனால் மாதம் ரூ.50,000 ஆயிரம் ஊதியமாக கிடைக்கும். அதோடு TA / DA வழங்கப்படும். விண்ணப்பத்தாரர்கள் தமிழ், ஆங்கிலத்துடன் பிற மொழிகளை கற்று கொண்டிருப்போருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

 தேர்வு முறை

தேர்வு முறை

இந்த பணிக்கான விண்ணப்பத்தாரர்களுக்கு எழுத்து தேர்வு கிடையாது. விண்ணப்பதாரர்கள் நேர்க்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் 28.09.2022ம் தேதி நடக்கும் நேர்க்காணலில் பங்கேற்க வேண்டும். பயோடேட்டா, தேவையான சுய-சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளலாம். இந்த நேர்க்காணலானது, ‛‛ கோ-ஆப்டெக்ஸ் தலைமை அலுவலகம், எண். 350, பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை - 600008'' என்ற முகவரியில் நடைபெற உள்ளது.பணி தொடர்பான முறையான அறிவிப்பை காண Click Here

கோ ஆப்டெக்ஸ் அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல Click Here
***

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+