மாத ஊதியம் ரூ.35,400.. ரயில்வேயில் குவிந்திருக்கு வேலைவாய்ப்பு.. தமிழகம் உள்பட பல இடங்களில் பணி
சென்னை: மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சிஆர்ஐஎஸ்ஸில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.இதில் தமிழகம் உள்பட பல இடங்களில் ரூ.35,400 சம்பளத்தில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில்ரயில்வே தகவல் அமைப்பு மையம் (Centre for Railway Information Systems or CRIS) உள்ளது. பல்வேறு தகவல்கள் சேமித்து வைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இங்கு காலிப்பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ள நிலையில் அதன் முக்கிய விபரங்கள் வருமாறு:

காலியிடம் எவ்வளவு?
சிஆர்ஐஎஸ் எனும் ரயில்வே தகவல் அமைப்பு மையத்தில் மொத்தம் 24 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்கள் ஜூனியர் என்ஜினீயர் மற்றும் எக்ஸிக்கியூட்டிவ் என்ற 2 பிரிவுகளில் நிரப்பப்பட உள்ளது. அதன்படி ஜூனியர் எலக்ட்ரிக்கல் என்ஜினீயர் பணிக்கு 4 பேர், ஜூனியர் சிவில் என்ஜினீயர் பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். எக்ஸிக்கியூட்டிவ் பிரிவில் பர்சனல்/நிர்வாகம்/எச்ஆர்டி பிரிவுக்கு 9 பேர், பைனான்ஸ்/அக்கவுண்ட்ஸ் பிரிவில் 8 பேர், ப்ரோக்குர்மென்ட் பிரிவில் 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வி தகுதி என்ன?
ஜூனியர் எலக்ட்ரிக்கல் என்ஜினீயர் பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் டிப்ளமோ பிரிவில் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் படிப்பையும், ஜூனிர் சிவில் என்ஜினீயர் பிரிவுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் டிப்ளமோ சிவில் என்ஜினீயரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். எக்ஸிக்கியூட்டிவ் பிரிவில் (பர்சனல்/நிர்வாகம்/எச்ஆர், பைனான்ஸ், அக்கவுண்ட்ஸ்) பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் டிகிரி, எ்பிஏ, டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். எக்ஸிக்கியூட்டிவ் பிரிவில் (ப்ரோக்குர்மென்ட் ) பிரிவுக்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கு டிப்ளமோ, எம்பிஏ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு என்ன?
விண்ணப்பத்தாரர்களுக்கு குறைந்தபட்ச வயதாக 22 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 28 வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும் விலக்கு அளிக்கப்படும். இதேபோல் பிற பிரிவினருக்கும் வயது தளர்வு என்பது அரசு விதிகளின் படி பின்பற்றப்பட உள்ளது.

ஊதியம் எவ்வளவு?
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.35,400 வரை கிடைக்கும். மேலும் இவர்கள் தெலங்கானாவின் செகந்திராபாத், தமிழகத்தின் தலைநகரான சென்னை, மகாராஷ்டிராவின் மும்பை, மேற்கு வங்கத்தின் கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பம் செய்வது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய டிசம்பர் 20ம் தேதி கடைசிநாளாகும். இவ்வாறு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்கள் கம்யூட்டர் வழி தேர்வு, நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வேலை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications