கனரா உள்பட பல வங்கிகளில் வேலைவாய்ப்பு.. காலியாக உள்ள 6432 பணியிடம்.. விண்ணப்பிக்க நல்ல வாய்ப்பு!
டெல்லி: வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐபிபிஎஸ்) சார்பில் பல்வேறு வங்கிகளில் 6432 பணியிடங்கள் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்தியாவின் பல்வேறு வங்கிகளுக்கு ஆட்சேர்ப்பு பணியை வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐபிபிஎஸ்) மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் ஐபிபிஎஸ் சார்பில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
இந்த அறிவிப்பின் படி இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளில் ஏராளமானவ பணியிடங்கள் நிரப்பபட உள்ளது. இந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள்வருமாறு:

6432 பணியிடங்கள்
பல்வேறு வங்கிகளில் காலியாக உள்ள 6,432 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ப்ரோபேஷனரி ஆபிசர் (பிஓ), மேனேஜ்மெண்ட் டிரெய்னி என இரு பிரிவுகளில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. வங்கிகள் வாரியாக கனரா வங்கி 2,500 பணியிடங்கள், யூகோ வங்கியில் 550 பணியிடங்கள், பேங்க் ஆப் இந்தியாவில் 535 பணியிடங்கள், பஞ்சாப் நேஷனல் வங்கியில் 500 பணியிடங்கள், யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் 2094 பணியிடங்கள், பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கியில் 253 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

படிப்பு, வயது வரம்பு என்ன?
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். விண்ணப்பத்தாரர்களின் குறைந்தபட்ச வயது 20 ஆகவும், அதிகபட்சமாக 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். வயதானது 2022 ஆகஸ்ட் மாதம் 1ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு அரசு விதிகளின் படி வயது தளர்வுகள் உண்டு.

கடைசி நாள் என்ன?
இதற்கு விண்ணப்பக்கட்டணமாக பொது பிரிவினருக்கு ரூ.850, எஸ்.சி,எஸ்.டி மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு ரூ.175 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் செய்ய 2022 ஆகஸ்ட் 22ம் தேதி கடைசிநாளாகும். விண்ணப்பத்தை www.ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று படிவம் பதிவிறக்கி பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை எப்படி?
விண்ணப்பத்தாரர்கள் முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகததேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். முதல்நிலை தேர்வு அக்டோபரிலும், முதன்மை தேர்வு நவம்பரிலும் நடைபெற வாய்ப்பு உள்ளது. கூடுதல் விபரங்களை www.ibps.in இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications