Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IT JOBS: ரூ.20 லட்சம் வரை சம்பளம் + வீட்டில் இருந்தே வேலை.. 20,000 காலியிடங்கள்.. பிப்ரவரி 5 கடைசி நாள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கூகுள், அமேசான் உள்பட பல்வேறு முன்னணி நிறுவனங்களில் காலியாக உள்ள 20 ஆயிரத்துக்கும் அதிகமான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பம் செய்ய பிப்ரவரி 5 கடைசி நாளாகும். இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளதால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்து பயன் பெறலாம்.

இப்போது கல்லூரி படிப்பை படிக்கும் பலருக்கும் அதற்கேற்ப பணிகள் கிடைப்பது பெரும் சிரமமாக உள்ளது. இந்நிலையில் தான் நல்ல பணியை எதிர்பார்த்து காத்திருப்போருக்காக சூப்பர் அறிவிப்பு Internshala சைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

it jobs jobs

Internshala ‛சைட்' என்பது கல்லூரி மாணவர்கள் மற்றும் கல்லூரி படிப்பை முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்புகளை வழங்கும் ஒரு இணையதளமாகும். இந்த இணையதளத்தில் பிரபல நிறுவனங்களில் இருக்கும் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வரும்.

20,000க்கும் அதிக பணி

அந்த வகையில் தற்போது Internshala தளத்தில் ‛Big Brands Bigger Salaries' என்ற பெயரில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 20 ஆயிரத்துக்கும் அதிகமான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் 10 ஆயிரம் பணிகளுக்கு அனுபவம் என்பது தேவையில்லை.

கல்வி தகுதி என்ன?

மொத்தம் 2,500க்கும் அதிகமான நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் கூகுள், அமேசான் உள்பட பல நிறுவனங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இன்ஜினியரிங், டிகிரி உள்பட எந்த படிப்புகளை படித்து இருந்தாலும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளது.

ரூ.20 லட்சம் வரை சம்பளம்

பணி அனுபவம் உள்ளவர்கள், இப்போது தான் கல்லூரி படிப்பை முடித்து அனுபவம் இல்லாதவர்கள் என்று அனைவரும் தங்களின் திறமைக்கு ஏற்ப விண்ணப்பம் செய்து பணியை பெறலாம். அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.20 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு வேலையை பொறுத்து சம்பளம் மாறுபடும்.

வீட்டில் இருந்தும் வேலை

இங்கு ஒவ்வொரு நிறுவனங்களை பணிச்சூழல் மாறுகிறது. சில நிறுவனங்களில் அலுவலகத்தில் இருந்து தான் வேலை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் வீட்டில் இருந்தும் பல நிறுவனங்கள் பணியாற்ற அனுமதி கொடுக்கின்றன. இன்னும் சில நிறுவனங்களில் Hybrid முறையில் ஊழியர்களிடம் வேலை வாங்குகிறது. அதன்படி அலுவலகம் + வீட்டில் இருந்து பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படுகிறது.

பிப்ரவரி 5 கடைசி நாள்

மேலும் ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என்று அனைவரும் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்ய பிப்ரவரி 5ம் தேதி கடைசி நாளாகும். இந்த இணையதளம் சென்று அதில் உள்ள சர்ச் பாக்ஸில் நீங்கள் விரும்பும் பணியின் பெயர், பணியாற்ற விரும்பும் இடம், நிறுவனத்தின் பெயர்களை டைப் செய்து உங்களுக்கு பிடித்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளதால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+