ஆண்டுக்கு ரூ.28.39 லட்சம் சம்பளம்.. கொச்சி-பெங்களூரில் பணி.. அழைக்கும் சவுத் இந்தியன் வங்கி..
பெங்களூர்: சவுத் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.28.39 லட்சம் வருமானத்தில் கொச்சி, பெங்களூரில் பணி செய்ய வாய்ப்பு கிடைக்கும்.
சவுத் இந்தியன் வங்கியில் அதிகாரி மற்றும் எக்ஸிக்கியூட்டிவ் அளவில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
அதன்படி கேரளாவின் கொச்சி மற்றும் கர்நாடகாவின் பெங்களூர் ஆகிய இடங்களில் பணி செய்ய வாய்ப்பு கிடைக்கும். இந்த பணிக்கான அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

பணியிடங்கள் என்னென்ன?
சவுத் இந்தியன் வங்கியில் Senior Technical Architect, Enterprise Technology Architect, Cloud Architect, EFT Switch Admin, Finacle Interface Administrator, Senior Developer என பல்வேறு பணியிடங்கள் நிரப்பபப்பட உள்ளன. இவை அனைத்தும் அதிகாரி மற்றும் எக்ஸிக்கியூட்டிவ் பதவிகளாகும்.

கல்வி தகுதி-ஊதியம் என்ன?
இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவர்கள் எம்டெக், எம்இ, பிடெக், பிஇ, எம்சிஏ, எம்எஸ்சி (ஐடி/சிஎஸ்), பிசிஏ, பிஎஸ்சி (ஐடி/சிஎஸ்/சிஏ) படிப்பை 60 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.9.33 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.28.39 லட்சம் வரை ஊதியம் கிடைக்கும்.

வயது வரம்பு எவ்வளவு?
ஒவ்வொரு பணிக்கு ஏற்ப வயது வரம்பு மாறுபடுகிறது. அதிகபட்சமாக விண்ணப்பத்தாரர்கள் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பத்தாரர்களின் வயதானது 31.07.2022 அன்றைய தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.southindianbank.com எனும் இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பிக்க 08.09.2022 கடைசிநாளாகும். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு விண்ணப்பம் செய்பவர்கள் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு தொழில்சார் நேர்க்காணல் மற்றும் இறுதிக்கட்ட நேர்க்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
அதிகாரப்பூர் இணையதளம் செல்ல Click Here












Click it and Unblock the Notifications