For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மத்திய அரசு பணி.. மாத சம்பளம் ரூ.67,000 முதல் ரூ.2 லட்சம் வரை.. அனைவரும் ஈஸியாக விண்ணப்பிக்கலாம்

Google Oneindia Tamil News

டெல்லி: யுபிஎஸ்சி எனும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் மத்திய வேளாண்துறை அமைச்சகத்தில் காலியாக உள்ள உயர் பதவிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்தால் ரூ.67 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை மாத சம்பளமாக பெற முடியும்.

யூபிஎஸ்சி (UPSC)எனும் மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பில் மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு ஆட்சேர்ப்பு நடத்தப்படுகிறது. அந்த வகையில் தற்போது மத்திய விவசாயத்துறை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

அதன்படி பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு வெளியான நிலையில் அதன் முக்கிய விபரம் வருமாறு:

தமிழ்நாட்டிலேயே பணி.. அரசு மருத்துவமனையில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பம் செய்யுங்க..நல்ல வாய்ப்புதமிழ்நாட்டிலேயே பணி.. அரசு மருத்துவமனையில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பம் செய்யுங்க..நல்ல வாய்ப்பு

 காலியிடங்கள் எவ்வளவு?

காலியிடங்கள் எவ்வளவு?

மத்திய விவசாயத்துறை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் உள்ள மெஷின் பயிற்சி மற்றும் பரிசோதனை நிறுவனத்தில் மொத்தம் 160 காலிப்பணியிடங்கள் உள்ளன. Senior Agricultural Engineer - 7, Agricultural Engineer - 1, Assistant Director(Corporate Law) - 13, Assistant Chemist - 1, Assistant Hydrogeologist - 70 என மொத்தம் 92 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

 கல்வி தகுதி என்ன?

கல்வி தகுதி என்ன?

ஒவ்வொரு பதவிகளுக்கும் தனித்தனி கல்வி தகுதிகள் உள்ளன. Senior Agricultural Engineer, Agricultural Engineer பணிக்கு விண்ணப்பம் செய்பவர் Agricultural Engineering அல்லது மெக்கானிக்கல் என்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். Assistant Directore பணியை விரும்புவோர் சட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். Assistant Chemist பணிக்கு கெமிஸ்ட்ரி, ஆர்கானிக் கெமிஸ்ட்ரி, பிசிக்கல் கெமிஸ்ட்ரி உள்ளிட்ட படிப்புகளில் பட்ட மேற்படிப்பை முடித்திருக்க வேண்டும். Assistant Hydrogeologist பணிக்கு மாஸ்டர் டிகிரியை Geology, Applied Geology, Geo-exploration, Earth Science உள்ளிட்ட பாடங்களில் ஏதேனும் ஒன்றில் முடித்திருக்க வேண்டும்.

 மாத சம்பளம் எவ்வளவு?

மாத சம்பளம் எவ்வளவு?

senior Agricultural Engineer பணிக்கு மாத சம்பளமாக ரூ.67,700 முதல் ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்து 700 வரை வழங்கப்படும். Agricultural Engineer பணிக்கு மாதம் ரூ.44 ஆயிரத்து 900 முதல் ரூ.1.42 லட்சம் வரை வழங்கப்படும். Assistant Director (Corporate Law) பணிக்கு ரூ.47 ஆயிரத்து 600 முதல் ரூ.1.51 லட்சம் வரையும், Assistant Chemist பணிக்கு ரூ.47 ஆயிரத்து 600 முதல் ரூ.1.51 லட்சம் வரையும், Assistant Hydrogeologist பணிக்கு ரூ.47 ஆயிரத்து 600 முதல் ரூ.1.51 லட்சம் வரையும் சம்பளமாக வழங்கப்படும்.

 வயது வரம்பு என்ன?

வயது வரம்பு என்ன?

senior Agricultural Engineer பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 40 வயதுக்குள்ளும், Agricultural Engineer பணிக்கு 33 வயதுக்குள்ளும், Assistant Director (Corporate Law), Assistant Hydrogeologist, Assistant Chemist பணிகளுக்கு 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மேலும் அரசு விதிகளின் படி பட்டியல் பிரிவினருக்கு வயது தளர்வுகளும் உண்டு.

 விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பம் செய்பவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்க்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணமாக ரூ.25 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூபிடி, பெண்களுக்கு விண்ணப்பம் கட்டணம் கிடையாது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இணையதளத்தில் விண்ணப்பம் பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பம் செய் வேண்டும். விண்ணப்பம் செய்ய டிசம்பர் 2ம் தேதி கடைசி நாளாகும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

English summary
The Central Government Staff Selection Commission (UPSC) is going to fill up the vacancies for the senior posts in the Ministry of Agriculture. Eligible and willing candidates can get a monthly salary of Rs.67 thousand to Rs.2 lakh if they apply for this job.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X