திருமுருகன் காந்தி, வளர்மதியைத் தொடர்ந்து சீமானுக்கும் குறி?
நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதும் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.
சேலம்: தமிழர் உரிமைகளுக்காக போராடிய திருமுருகன் காந்தி, வளர்மதி உள்ளிட்டோரைத் தொடர்ந்து நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக தமிழ் உணர்வாளர்கள் பலரையும் அச்சுறுத்தி வருகிறது குண்டர் சட்டம். முதலில் திருமுருகன் காந்தி, பின்னர் மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

சீமான் மீது வழக்கு
கதிராமங்கலத்தில் போராடிய பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோர் மீதும் குண்டர் சட்டம் பாயலாம் என கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் சேலம் போலீசார், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பொது அமைதிக்கு குந்தகம்
தமிழ் தேசிய இன மக்கள் சந்திக்கும் சிக்கல்களும் தீர்வுகளும் என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சியினர் கடந்த 4-ந் தேதி பொதுக்கூட்டம் நடத்தினர். இக்கூட்டத்தில் பேசிய சீமான், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தார்; இளைஞர்களை தூண்டிவிடும் வகையில் பேசினார் என பொதுக்கூட்டத்துக்கு பாதுகாப்பு சென்ற போலீசார் அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தனர்.

4 பிரிவுகளில் வழக்கு
இதையடுத்து சீமான் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய சேலம் போலீஸ் கமிஷனர் சஞ்சய் குமார் உத்தரவிட்டார். தற்போது சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குண்டர் சட்டத்தில் குறி?
ஏற்கனவே மாணவி வளர்மதி மீது வழக்குப் பதிவு செய்து அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததும் இதே சேலம் போலீஸ்தான். இதனால் சீமான் மீதும் குண்டர் சட்டம் பாயக் கூடும் என கூறப்படுகிறது.
-
காக்கிச் சட்டை டூ எம்.எல்.ஏ..! தேர்தல் ஆணையம் அதிகாரிகளை அதிரடியாக மாற்றுவது ஏன் தெரியுமா? -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications