அதிமுக அரசு ‘அம்மா’ புகழ் பாடிக் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறது: கருணாநிதி
சென்னை: காவிரிக்கு குறுக்கே தடுப்பணை கட்டும் விவகாரத்தில் கர்நாடகா தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் அதிமுக அரசு அம்மா புகழ் பாடிக் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறது எனக் கருத்துத் தெரிவித்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி - பதில் வடிவிலான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :-
கேள்வி:- காவிரி ஆற்றில் மேகதாதுவில் அணைகள் கட்டுவது உறுதி என்று அந்த மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்திருக்கிறாரே?
கலைஞர்:- இந்தக் கேள்வியை நாம் கேட்டாலோ, நினைவுபடுத்தினாலோ, அவசர அவசரமாக பேரவையில் இன்றைக்கே முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஒரு அவசரத் தீர்மானம்கொண்டு வந்து காவிரி ஆற்றைத் தோற்றுவித்ததே எங்கள் "அம்மா"தான், அதற்காக ஒரு பாராட்டுத் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று ஆரம்பித்து விடுவார்!
உடனே அவை முன்னவர் எழுந்து, "கருணாநிதிக்கு என்ன தெரியும்? ஐந்து முறை முதலமைச்சராக எப்படி இவர் இருந்தார்? இவருக்கு ஒன்றுமே தெரியாது, எல்லாம் எங்கள் "அம்மா"வுக்குத் தான் தெரியும்!" என்று ஆரம்பித்து விடுவார்.
அதற்குப் பதில் கூற கழக உறுப்பினர்கள் எழுந்தால், உடனே வெளியேற்றி விடுவார்கள். ஆனால் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா "காவிரி டெல்டா பகுதியில் உள்ள மேகதாதுவில் அணைகள் கட்ட அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக திட்ட வரைவு தயாரிக்க உலகளாவிய டெண்டர் விடப் பட்டுள்ளது" என்றெல்லாம் கூறி, ஏடுகளிலே அந்தச் செய்திவந்துள்ளது.
இதற்கிடையே, காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணை கட்ட திட்டமிட்டுள்ள நிலையில், கட்டுமானப் பொருள்களைக் கொண்டு செல்வதற்கு ஏதுவாக, வனப் பகுதியிலிருந்து மேகதாதுவுக்குச் செல்ல சங்கமத்தில் இருந்து அர்த்தாவதி ஆற்றின் குறுக்கே புதிதாகப் பாலம் கட்டும் பணி மேற்கொள்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் ஏடுகளிலே செய்தி வந்துள்ளது. கர்நாடக அரசு மேலும் மேலும் அணை கட்டும் முயற்சியிலே ஈடுபட்டு செயலிலே தொடர்ந்து முனைப்பு காட்டி வருகிறது.
ஆனால் நம்முடைய அ.தி.மு.க. அரசு "அம்மா" புகழ் பாடிக் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
-
திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம்..விஜய் மைக்குடன் பிரச்சாரம் செய்யக் கூடாதா? தவெக அடுக்கடுக்காக கேள்வி -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
வேட்பாளரை மாற்றுங்க.. அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட்ட.. தாம்பரம் எம்எல்ஏ SR ராஜா ஆதரவாளர்கள் -
DMK Manifesto: மகளிர் உரிமைத் தொகை ரூ 2000 உயர்வு! 8ஆவது ஊதியக் குழு அமல்! ஸ்டாலின் அறிவிப்பு -
"ரூ.30 லட்சம் வரை கடனுதவி".. சிறுபான்மையினரை கவர திமுக தேர்தல் அறிக்கையில் டாப் 10 அறிவிப்பு -
DMK MANIFESTO: மகளிர் உரிமைத்தொகை டூ முதியோர் பென்ஷன் வரை.. 13 திட்டங்களின் உதவித்தொகைகள் உயர்வு – ஸ்டாலின் -
நன்னிலம் தொகுதி வேட்பாளர் முகமது முபாரக்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் எஸ்டிபிஐ! -
ஆண்டிப்பட்டியில் மீண்டும் ‘சகோதர யுத்தம்’.. அண்ணன் திமுக vs தம்பி அதிமுக.. வெல்லப்போவது யார்? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல்












Click it and Unblock the Notifications