டெங்கு காய்ச்சல் பாதிப்பில் தமிழகம் நம்பர் 1 - 21,350 பேர் பாதிப்பு
நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 21,350 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்திய அளவில் டெங்கு பாதிப்புக்குள்ளான மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. தமிழகத்தில் 21,350 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏடிஸ் ஏஜிப்டி என்ற கொசுவினால் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. நல்ல தண்ணீரில் மட்டுமே இந்த கொசுக்கள் உயிர்வாழ்கின்றன. இந்தியாவில் இந்த ஆண்டு காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் பலர் சரியான சிகிச்சையின்றி உயிரிழக்கின்றனர்.
தமிழகத்தின் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே ஆண்டில் 10 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகம் நம்பர் 1
தமிழகத்தில் ஏற்பட்ட டெங்கு காய்ச்சலால் 21 ஆயிரத்து 350 பேர் பாதிக்கப்பட்டனர். இது, நாட்டிலேயே மிக அதிக அளவாகும். 2014ஆம் ஆண்டில் டெங்கு காய்ச்சலுக்கு 2 ஆயிரத்து 804 பேரும், 2015ஆம் ஆண்டில் 4 ஆயிரத்து 535 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெங்கு பாதிப்பு
2016ஆம் ஆண்டைப் பொறுத்தவரை தமிழகத்தில் 2 ஆயிரத்து 531 பேர் மட்டுமே டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு 21 ஆயிரத்தைத் தாண்டியிருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் டெங்கு
நாடு முழுவதும் நடப்பு ஆண்டில், 1,50,482 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் மட்டும் 19 ஆயிரத்து 695 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டதாக மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

16,342 பேர் பாதிப்பு
கர்நாடகாவில் 16,342 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 2014ம் ஆண்டு தமிழகத்தில் 2,804 பேரும், 2015ல் 4,535 பேரும், 2016ல் 2,531 பேரும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தடுப்பு நடவடிக்கைகள் என்ன?
கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெங்குவால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையும், அதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்காண்டு அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும். தடுப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications