சத்தமே இல்லாமல் உருவான புதிய கிளஸ்டர்.. தமிழகம் முழுக்க புது கொரோனா கேஸ்கள்.. இதுதான் பின்னணி!
தமிழகத்தில் கோயம்பேடு கிளஸ்டரை தொடர்ந்து தற்போது புதிய கொரோனா கிளஸ்டர் பரவல் சத்தமின்றி உருவாகிக் கொண்டு இருக்கிறது.
சென்னை: தமிழகத்தில் கோயம்பேடு கிளஸ்டரை தொடர்ந்து தற்போது புதிய கொரோனா கிளஸ்டர் பரவல் சத்தமின்றி உருவாகிக் கொண்டு இருக்கிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. சில நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்த எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. மீண்டும் 500 என்ற தினசரி எண்ணிக்கையை தமிழகம் கடந்துள்ளது. தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11224 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நேற்று மேலும் 639 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 480 பேருக்கு நேற்று கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,750 ஆக அதிகரித்துள்ளது.

மீண்டும் கொரோனா கேஸ்கள்
இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் 27ம் தேதியில் இருந்து தினமும் கொரோனா கேஸ்கள் அதிகரித்தபடி இருக்கிறது. தொடக்கத்தில் தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க பேனிக் பையிங் காரணம் என்று சொல்லப்பட்டது. ஆனால் அதன்பின் தமிழகத்தில் கோயம்பேடு மார்க்கெட் மூலம் கொரோனா கேஸ்கள் வர தொடங்கியது.

கோயம்பேடு மார்க்கெட் கேஸ்கள்
முக்கியமாக சென்னையில் பலருக்கு கோயம்பேடு மார்க்கெட் மூலம் கொரோனா வந்தது. சென்னையில் மட்டுமின்றி தமிழகம் முழுக்க கோயம்பேடு மூலம் கொரோனா கேஸ்கள் பரவ தொடங்கியது. வடமாவட்டங்கள் கோயம்பேடு மார்க்கெட் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டது . தமிழகம் முழுக்க 2000 + கேஸ்களுக்கு கோயம்பேடு காரணம் என்று கூறப்படுகிறது. சென்னையில் மட்டும் 1000+ கேஸ்களுக்கு கோயம்பேடு காரணம் என்று கூறப்படுகிறது.

புதிய கிளஸ்டர் கேஸ்கள்
இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் கோயம்பேடு கிளஸ்டரை தொடர்ந்து தற்போது புதிய கொரோனா கிளஸ்டர் பரவல் சத்தமின்றி உருவாகிக் கொண்டு இருக்கிறது. தமிழகத்திற்குள் தற்போது பிற மாநிலத்தில் இருந்து வரும் மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதாவது கொரோனா லாக்டவுன் காரணமாக வெளிமாநிலங்களில் சிக்கி இருந்த தமிழர்கள் மீண்டும் தமிழகம் வர தொடங்கி உள்ளனர். தினமும் பலர் இப்படி தமிழகம் வருகிறார்கள்.

அதிகரிக்கும் கேஸ்கள்
முக்கியமாக மஹாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் இருந்து பலர் இப்படி தமிழகம் வருகிறார்கள். இவர்கள் மூலம் தமிழகத்தில் தினமும் கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று சென்னைக்கு ஆந்திராவில் இருந்தும் கர்நாடகாவில் இருந்தும் வந்த 2 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. கள்ளக்குறிச்சியில் 14 பேருக்கு கொரோனா வந்தது. இவர்கள் மகாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள்.

நேற்றைய நிலை
கரூரில் 16 பேருக்கு கொரோனா வந்தது. இவர்களும் மகாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள். மதுரையில் 3 பேருக்கு கொரோனா வந்தது. இவர்களில் 2 பேர் மகாராஷ்டிரா ஒருவர் கர்நாடகா. சேலத்தில் 9 பேருக்கு கொரோனா வந்தது. எல்லோரும் வெளிமாநிலத்திலிருந்து வந்தவர்கள். மகாராஷ்டிராவில் இருந்து சிவகங்கைக்கு வந்த 4 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. தூத்துக்குடியில் 12 பேருக்கும், திருநெல்வேலியில் 14 பேருக்கும் மகாராஷ்டிராவில் இருந்து வந்ததால் கொரோனா ஏற்பட்டுள்ளது .

விழுப்புரம் வந்தவர்கள் கொரோனா
மகாராஷ்டிராவில் இருந்து விழுப்புரம் வந்த 4 பேருக்கு இதேபோல் கொரோனா வந்துள்ளது. திருநெல்வேலியில் இரண்டு நாட்கள் முன் ஒரே நாளில் 40 பேருக்கு வெளிமாநிலத்தில் இருந்து வந்ததால் கொரோனா ஏற்பட்டது. கோயம்பேடு மார்க்கெட் கிளஸ்டருக்கு பின் தமிழகத்தில் இப்படி புதிய கிளஸ்டர் தோன்றி உள்ளது. தமிழகத்தில் இப்படி புதிய நபர்களுக்கு கொரோனா ஏற்பட வெளிமாநில காரணமாக மாறியுள்ளனர்.

கட்டாயம் தனிமை
இதில் ஒரே நல்ல விஷயம் வெளிமாநிலத்தில் இருந்து தமிழகம் வரும் எல்லோரும் கட்டாயமாக தனிமைப்படுத்தப்படுகிறார்கள். எல்லோரும் செக் போஸ்டிலேயே சோதனை செய்யப்படுவார்கள். இதனால் இவர்கள் மூலம் தமிழகத்தில் வேறு நபர்களுக்கு கொரோனா பரவவில்லை. ஆனால் இந்த புதிய கிளஸ்டர் மூலம் தமிழகத்தில் மேலும் பலருக்கு கொரோனா பரவ வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
-
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications