Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்த நாள் ஞாபகம் நாவிலே வந்ததே இப்போது தேன் மிட்டாய் ஆன்லைனில்...

Subscribe to Oneindia Tamil

சிறுவயதிலே நாம் ரசித்து ருசித்த பல தின்பண்டங்களில் மறக்க முடியாத ஒரு தின்பண்டம் தான் இந்த தேன் மிட்டாய். எவ்வளவோ தின்பண்டகளை இன்று நாம் ருசித்தாலும் எவ்வளவு தான் விலை அதிகமான ருசியான தின்பண்டங்களை ருசித்தாலும் இந்த தேன் மிட்டாயை இன்றளவும் நினைத்த உடன் நம் நாவிலே எச்சில் ஊற ஆரம்பித்து விடும்.

ஏன் தேன் மிட்டாய் மட்டும் சிறுவயதில் நம் மனதில் இடம் பிடித்தது:

Thaenmittai is the traditional tamil snack

சிறுவயதில் இந்த தேன் மிட்டாய் தேனிலே செய்தது என்று நம்பியதாலும், சர்க்கரை பாகை தேன் என்று நினைத்து ரசித்து அதை ருசித்தும் நம் மனதில் அந்த ருசியான தேன் மிட்டாய் நீங்கா இடம் பிடித்தது. அது மட்டும் இல்லாமல் நம் நண்பர்களுடன் பகிர்ந்து உண்ட தின்பண்டகளில் தேன் மிட்டாயும் ஒன்று. அதே போல் நம்மிடம் இருக்கும் 50 பைசாவிற்கு கை நிறைய தேன் மிட்டாய் வாங்கி சட்டை பையிலே போட்டு ருசித்தும் ஒரு காலம் நெஞ்சில் நிற்கும் அந்த காலம் மீண்டும் வருமா என்பது ஏக்கமே.

மிக முக்கியமாக உருண்டையான மிட்டாயை ரெண்டு விரலாலே பிடிச்சு, லேசா நுனி பல்லில் பட நாக்கில வச்சு, மெல்ல உறிஞ்சி உள்ள இருக்கிற தேனை மட்டும் குடிக்கிற ஆனந்த அனுபவம் இருக்கே.. அதெல்லாம் வார்த்தையால சொல்லி விளக்க முடியாது. அனுபவிக்கணும். சிறு வயதில் மட்டும் இல்லை இப்பொழுதும் இந்த தேன் மிட்டாயை நினைத்த உடன் சாப்பிட்டு கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும்.

அதே தரத்துடன் உள்ள ருசியான தேன் மிட்டாய் எப்படி செய்வது

தேவையான பொருட்கள்

மைதா - 1கிலோ

தயிர் - 1கப்

சர்க்கரை - 1 1/2 கிலோ

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

மைதா, தயிர், தேவையான கலர், மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பிசைவது போல் பிசையவும். பின்னர் அதை 3 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறவைத்த பின்னர் வேறு ஒரு பாத்திரத்தில் சர்க்கரை பாகை நன்கு கம்பி பாகு பதத்திற்கு காய்ச்சி வைக்கவும்.

ஊறவைத்த மாவு நன்கு ஊறியதும் அதனை தேவையான அளவில் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வாணலியில் எண்ணெய்யை சூடாக்கி பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

Thaenmittai is the traditional tamil snack

பொரித்த உருண்டைகளைச் சர்க்கரை பாகு சூடாக இருக்கும் பொழுது அதில் போடவும். சிறிது நேரம் ஊறிய பின் எடுத்து உலர விடவும். சுவையான ருசியான தேன் மிட்டாய் ரெடி.

இப்பொழுதும் தேன் மிட்டாய் கிடைக்கிறதா?

ஆம் அதே ருசியான தேன் மிட்டாய் இன்றும் கிடைக்கிறது. தேன் மிட்டாய் ஆன்லைனில் நேடிவ்கிருஷ்.காம் என்ற பிரபல இணையதளம் ஆன்லைனிலே இந்த தேன் மிட்டாய் மற்றும் தமிழகத்தின் பல ஊர்களின் சிறப்பு பெற்ற தின்பண்டங்களையும் ஆன்லைனில் விற்கிறது. உங்களுக்கு பல ஊர்களுக்கு செல்லாமலே அந்த ஊர்களின் சிறப்பு பெற்ற தின்பண்டங்களை ஆன்லைனிலே ஆர்டர் செய்து குடும்பத்தோடு ருசியுங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+