சசிகலா மீதான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றுக- மைத்ரேயன் எம்.பி
கூவத்தூரில் எடப்பாடி பழனிசாமி, சசிகலா ஆகியோர் மீது பதிவான வழக்குகளை, சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த எம்.பி மைத்ரேயன் கூறியுள்ளார்.
சென்னை: கூவத்தூர் ரிசார்ட்டில் ஆய்வு செய்த காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் திட்டமிட்டு மாற்றப்பட்டு, காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று ஓபிஎஸ் ஆதரவு அதிமுக எம்.பி மைத்ரேயன் குற்றம்சாட்டியுள்ளார். கூவத்தூரில் எடப்பாடி பழனிசாமி, சசிகலா ஆகியோர் மீது பதிவான வழக்குகளை, சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை கோரி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியினர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் 36 இடங்களில் உண்ணாவிரதம் நடந்துவருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டில் மைத்ரேயன் எம்பி தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தை துவக்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசிய மைத்ரேயன், கூவத்தூர் ரிசார்ட்டில் தன்னை அடைத்துவைத்ததாக மதுரை மேற்குத் தொகுதி எம்எல்ஏ சரவணன் கொடுத்த புகாரின் பேரில், எடப்பாடி பழனிசாமி, சசிகலா ஆகியோர் மீது கூவத்தூர் காவல்நிலையத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
நேர்மையான அதிகாரிகள் விசாரணை நடத்தினால் உண்மை வெளியாகிவிடும் என்ற அச்சம் சசிகலாவிற்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஏற்பட்டுள்ளது. எனவேதான் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி திட்டமிட்டு மாற்றப்பட்டுள்ளார்.
கூவத்தூர் ரிசார்ட்டில் விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரிகள் எஸ்.பி. முத்தரசி, வடக்கு மண்டல ஐ.ஜி செந்தாமரைக்கண்ணன் ஆகியோர் மாற்றப்பட்டு, காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று மைத்ரேயன் குற்றம் சாட்டினார்.
சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி மீதான வழக்குகளை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மைத்ரேயன் வலியுறுத்தினார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications