மூச்சுவிடாமல் பட்ஜெட்டை வாசித்த ஜெயக்குமார்... கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபையில் 2017 - 18ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் ஜெயக்குமார் திடீரென உரையை வேகமாக வாசித்தார். இதனைப் பார்த்து சட்டசபையில் இருந்த உறுப்பினர்களும், டிவியில் லைவ் ஆக பார்த்தவர்களும் திகைத்துப் போயினர்.

பட்ஜெட் அறிவிப்புகளை வேகமாக வாசித்துக் கொண்டே போன ஜெயக்குமார்... பிறகு இப்படி வாசிக்கவா அல்லது மெதுவாக வாசிக்கவா என்று கேட்டார். அதற்கு சில உறுப்பினர்கள் வேகமாக வாசியுங்கள் என்றும், பலர் மெதுவாக வாசியுங்கள் என்றும் கூறினர். இதைக் கேட்ட ஜெயக்குமார், சற்று சுவாரஸ்யமாக்கவே இவ்வாறு செய்தேன் என்று பதில் அளித்தார்.

டுவிட்டரில் கிண்டல்

பலரும் இவரது பட்ஜெட் உரையைக் கேட்டு நெளிந்தனர். சிலர் கொட்டாவியை வெளிப்படுத்தினர். அமைச்சரின் பட்ஜெட் உரை இணையதளங்களில் கேலி, கிண்டலுக்க ஆளாகியுள்ளது.

பாடமா ஒப்பிக்கிறார்

பட்ஜெட் உரை வாசிப்பது ஒரு கலை. அதை கேட்க கேட்க உறுப்பினர்களும், மக்களுக்கும் ஆர்வம் அதிகரிக்க வேண்டும். இன்று ஜெயக்குமார் செய்தது மாணவர்கள் பாடம் ஒப்பிப்பது போல இருந்தது என்று கிண்டலடித்துள்ளார் ஒரு வலைஞர்.

கவித சொல்றாங்க

சட்டசபையில பட்ஜெட் வாசிக்க சொன்னா கவிதையா வாசிக்கிறீங்க என்று கேட்கிறார் ஒரு வலைஞர். பட்ஜெட் உரை வாசிக்கும் முன்பாக ஜெயலலிதாவை புகழ்ந்து கவிதை வாசித்தார் ஜெயக்குமார்.

மூச்சுவிடாம என்ன விளையாட்டு

எஸ்.பி பாலசுப்ரமணியன் மூச்சுவிடாமல் பாடியது போல இருந்தது ஜெயக்குமார் பட்ஜெட் உரை வாசித்தது என்று கிண்டடித்துள்ளார் ஒரு வலைஞர்.

ஸ் அப்பாடா...

ஸ் அப்பாடா...

பட்ஜெட் உரையை ஜெயக்குமார் வசித்து முடித்த உடன், ஸ் அப்பாடா ஒரு வழியா முடிச்சிட்டாரு... வாங்கப்பா கிளம்பலாம் என்பது போல பின்னால் இருந்த அமைச்சர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். முதல் பட்ஜெட் உரையை கிண்டலடிக்கும் விதமாக வாசித்து முடித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netizens said Tamilnadu Finance Minister Jayakumar was reading the budget like a rap song in fast mode.
Please Wait while comments are loading...