
Memes: வாழ்க்கைல அவ்ளோ சீக்கிரம் சுலபமா கடந்து விட முடியாத ஒன்று எது தெரியுமா.. பெருங்களத்தூர்தான்
சென்னை: தீபாவளி பண்டிகையின் போது மத்தாப்பு கொளுத்துவதற்கு முன்பு அது தொடர்பான மீம்ஸ்கள் நமக்கு புன்சிரிப்பை ஏற்படுத்துகின்றன.
ஒரு பண்டிகை வரக் கூடாது இந்த மீம்ஸ் கிரியேட்டர்கள் படுபிஸியாகிவிடுகிறார்கள். இப்பதான் சரஸ்வதி பூஜை போச்சு, அடுத்து தீபாவளி வந்துடுச்சுல்ல, மீம்ஸா போட்டு கலாய்க்கிறார்கள்.
அதிலும் பெண்கள் பலகாரம் செய்வதை வைத்து இவர்கள் போடும் மீம்ஸ்கள் அல்டிமேட். அது போன்ற தீபாவளி தொடர்பான மீம்ஸ்களில் சில வாசகர்களுக்காக:

வாழ்க்கையில் சுலபமில்லை
தீபாவளி பண்டிகையையொட்டி தென் மாநிலங்களுக்கு செல்வதற்காக பெருங்களத்தூரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது என்பதை விளக்குகிறது இந்த மீம்.

போனஸ்
போனஸ் எப்போது வரும் எப்போது வரும் என காத்திருந்த ஊழியர்கள், போனஸ் கிடைத்தவுடன் எப்படியெல்லாம் ஜாலியாக இருக்கிறார்கள் என்பதை சொல்கிறது இந்த மீம். பொதுவாக சிலர் தீபாவளி பண்டிகையின் கிடைக்கும் போனஸையும் விடுமுறையையும் வைத்துக் கொண்டு டூர் செல்வது வழக்கம். ஆனால் விலைவாசி உயர்வில் இதெல்லாம் சாத்தியமா. கிடைத்த கொஞ்சூண்டு சந்தோஷத்தை தனியே தன்னந்தனியே புதுவையில் அனுபவிக்கலாம் என்பதையும் உணர்த்துகிறது இந்த மீம்.

பட்டாசு
தீபாவளி என்றாலே நாம் வேலை பார்க்கும் இடத்திலிருந்து பட்டாசு, போனஸ் இவை கிடைக்கும் என்பதுதான். குறைந்தபட்சம் ஸ்வீட் பாக்ஸாவது கிடைக்கும் என எதிர்பார்த்து ஏமாந்து போவதை விளக்குகிறது இந்த மீம்.

வாழ்த்து
தீபாவளி, பொங்கல் என வந்துவிட்டாலே நமக்கு வாழ்த்துகள் குவியும். இதில் சிலர் யாரென்றே தெரியாதவர்களும் வாழ்த்துவர். அதாவது அடிக்கடி டச்சில் இல்லாவிட்டாலும் எப்பவோ கான்டாக்டில் இருந்தவர்கள் வாழ்த்துவார்கள். ஆனால் நமக்கு அவர்களை நினைவுப்படுத்தி தடுமாறுவோம். இதைத்தான் வடிவேல் காமெடியுடன் வாழ்த்து சொன்னியே டேய் யார்ரா நீ சொல்லிவிட்டு போ என்கிறது இந்த மீம்.

திருமணம் ஆகவில்லை
2கே கிட்ஸ் திருமணமாகி குழந்தையுடன் குதூகலமாக தீபாவளியோ அல்லது தலை தீபாவளியோ கொண்டாடும் நிலையில் 80 ஸ் கிட்ஸ், 90 கிட்ஸ் எல்லாம் இதுவரை திருமணம் ஆகாமல் முரட்டு சிங்கிளாகவே இருக்கிறார்கள். அவர்களது திருமண கனவை சொல்கிறது இந்த மீம்.