இனிமே தினகரன் தான் தர்மயுத்தம் செய்யனும் போல... நெட்டிசன்ஸ் கலக்கல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் டிடிவி தினகரன் ஒதுக்கப்பட்டுள்ளதையும் அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பங்களையும் வைத்து நெட்டிசன்ஸ் கலக்கல் மீம்ஸ்களை வெளியிட்டுள்ளனர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு மீண்டும் கட்சிக்குள் கொடிக்கட்டி பறந்தவர் டிடிவி தினகரன். அடுத்த முதல்வர் தான்தான் என சொல்லாத குறையாக கெத்து காட்டி வந்தார்.

சசிகலாவை தேர்தல் ஆணையம் அதிமுக பொதுச்செயலாளராக ஏற்கவில்லை என தகவல் வெளியானதை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியினர் டிடிவி தினகரனின் நியமனம் செல்லாது என அறிவித்து ஓரம்கட்டிவிட்டனர். இந்நிலையில் அதிமுகவில் ஏற்பட்டு வரும் அடுத்தடுத்த குழப்பங்களை வைத்து கலாய்த்துள்ளனர் நெட்டிசன்கள்..

ஓபிஎஸ் ஒரு 840

#தினகரன்:எடப்பாடி ஒரு 420! #எடப்பாடி:தினகரன் ஒரு 420!. அப்ப #ஓபிஎஸ்? தினகரன் + எடப்பாடி = ஓபிஎஸ் 420+420= 840 ஓபிஎஸ் ஒரு 840 என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்

420 தான் இருக்கு, பரவில்லையா

#தினகரன்: 500 ரூபாய்க்கு சில்லறை இருக்கா ? #எடப்பாடி : 420 தான் இருக்கு, பரவில்லையா.. என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்

விஜயகுமார் குரல்

#தினகரன் பேசும்போது அப்பிடியே நடிகர் விஜயகுமார் குரல், மாடுலேஷன். யாராவது அதை உணர்ந்தீர்களா? என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்

உறுப்பினர்களை அறிவித்த போது

#தினகரன் கட்சி உறுப்பினர்களை அறிவித்த போது.. என ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் இந்த நெட்டிசன்..

சக்கரம் சுத்துது

இனிமே #தினகரன் தான் தர்மயுத்தம் செய்யனும் போல... சக்கரம் சுத்துது... என கிண்டலடிக்கிறார் இந்த நெட்டிசன்..

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netizens making fun of ADMK Party confusions. In ADMK party lots confusions are there. ADMK became splits as three.
Please Wait while comments are loading...