கருவேப்பிலை மாதிரிதான் காலண்டரும்.. யாரும் பாக்குறது இல்லன்னாலும்.. சண்டை போட்டு ஓசி வாங்கிடுவாங்க!
சென்னை: புத்தாண்டிற்கு புதிதாக மாட்டும் காலண்டர் பற்றி இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வரும் சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு இது.
கடிகாரம் போலவே எல்லா வீடுகளிலும் தவறாமல் இடம் பிடித்திருப்பது காலண்டர். தொழில்நுட்ப வளர்ச்சியால் செல்போன்களிலேயே காலண்டர் இடம் பிடித்து விட்டாலும், சம்பிரதாயத்திற்காவது வீட்டில் காலண்டர் மாட்டும் பழக்கத்தை இன்னமும் பல வீடுகள் கடைபிடித்தே வருகின்றன. இதனால் தானோ என்னவோ, பல கடைகளில் தங்களது கடைப் பெயரை பிரிண்ட் பண்ணி இப்போதும் காலண்டர் பரிசளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

துணிக்கடைக்கு போனால் கட்டாயம் கட்டைப்பை வாங்க வேண்டும் என்பது போல், புத்தாண்டு பிறந்தால் ஓசி காலண்டர் வாங்கினால் தான் அந்த ஆண்டின் துவக்கமே சிறப்பாக இருக்கும் சிலருக்கு. நாட்களைப் போலவே இந்த நாட்காட்டிகளுக்கு பின்னாலும் இப்படி பல கதைகள் ஒளிந்து கொண்டிருக்கின்றன. நல்ல நேரம் பார்ப்பது தொடங்கி புதிய ஆண்டில் எத்தனை விடுமுறைகள் என புதிய காலண்டரை வாங்கியவுடனேயே அதற்கு வேலை கொடுத்து விடுவோம்.
2019ல் எப்படி இருந்தோம்.. 2022ல் எப்படி மாறிட்டோம் பாருங்க.. இந்த ஒற்றை மீம்ஸ் போதும்..
இப்படி புத்தாண்டுடன் நெருங்கிய தொடர்புடைய இந்த காலண்டரைக் கலாய்க்காமல் மீமர்கள் எப்படி இந்த 2022ஐ தொடங்குவார்கள்.
இதோ அப்படியாக காலண்டர் பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக..





