For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மேற்-கிந்-தி-ய தீ-வு-க-ளி-டம் -தி-ண-று-கி-ற--து பாகி-ஸ்-தான்

By Staff
Google Oneindia Tamil News

மே 20, 2000


இருளும் ஒளியும்

வான நடுவிலே மாட்சியுற ஞாயிறுதான்

மோனவொளி சூழ்ந்திடவும் மொய்ம்பிற் கொலுவிருந்தான்.

மெய்யெல்லாஞ் சோர்வு விழியில் மயக்கமுற

உய்யும் வழியுணரா துள்ளம் பதைபதைக்க,

நாணுந் துயரும் நலிவுறுத்த நான் மீண்டு (5)

பேணுமனை வந்தேன்; பிரக்கினை போய் வீழ்ந்துவிட்டேன்,

மாலையிலே மூர்ச்சை நிலை மாறித் தெளிவடைந்தேன் ;

நாலுபுறமுமெனை நண்பர் வந்து சூழ்ந்துநின்றார்.

ஏனடா மூர்ச்சையுற்றாய்? எங்கு சென்றாய்? ஏது செய்தாய்?

வானம் வெளிறு முன்னே வைகறையி லேதனித்துச் (10)

சென்றனை என்கின்றாரச் செய்தி என்னே? ஊணின்றி

நின்றதென்னே?. என்று நெரித்துவிட்டார் கேள்விகளை,

இன்னார்க் கிதுசொல்வ தென்று தெரியாமல் ,

என்னாற் பலவுரைத்தல் இப்பொழுது கூடாதாம்.

நாளை வருவீரேல் நடந்ததெலாஞ் சொல்வேன் இவ் (15)

வேளை எனை த்தனியேவிட்டகல்வீர் என்றுரைத்தேன்.

நண்பரெல்லாஞ் சென்றுவிட்டார்; நைந்துநின்ற தாயார் தாம்

உண்பதற்குப் பண்டம் உதவிநல்ல பால்கொணர்ந்தார்,

சற்று விடாய்த்தீர்ந்து தனியே படுத்திருந்தேன்;

முற்றும் மறந்து முழுத்துயிலில் ஆழ்ந்துவிட்டேன். (20)

பண்டு நடந்ததனைப் பாடுகின்ற இப்பொழுதும் ,

மண்டு துயரமென்று மார்பை யெலாங் கவ்வுவதே.

ஓடித் தவறி உடையனவாம் சொற்களெல்லாம்,

கூடி மதியிற் குவிந்திடுமாம் செய்தியெலாம்,

நாசக்கதையை நடுவே நிறுத்திவிட்டுப் (25)

பேசு மிடைப்பொருளின் பின்னே மதிபோக்கிக்

கற்பனையும் வர்ணனையுங் காட்டிக் கதைவளர்க்கும்

விற்பன்னர்தஞ் செய்கை விதமுந் தெரிகிலன்யான்

மேலைக் கதையுரைக்க வெள்கிக் குலையுமனம்

காலைக் கதிரழகின் கற்பனைகள் பாடுகிறேன். (30)

தங்க முருக்கித் தழல்குறைத்துத் தேனாக்கி

எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ? வான்வெளி.யச்

சோதிகவர்ந்து சுடர்மயமாம் விந்தையினை

ஓதிப் புகழ்வார் உவமையொன்று காண்பாரோ?

கண்ணையினி தென்றுரைப்பார்; கண்ணுக்குக் கண்ணாகி (35)

விண்ணை அளக்குமொளி மேம்படுமோர் இன்பமன்றோ?

மூலத் தனிப் பொருளை மோனத்தே சிந்தை செய்யும்

மேலவரும் அஃதோர் விரியுமொளி என்பாரெல்

நல்லொளிக்கு வேறு பொருள் ஞாலமிசை யொப் புளதோ

புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கி, (40)

மண்ணைத் தெளிவாக்கி, நீரில் மலர்ச்சி தந்து

விண்ணை வெளியாக்கி விந்தைசெயுஞ் சோதியினைக்

காலைப் பொழுதினிலே கண்விழித்து நான் தொழுதேன்.

நாலு புறத்துமுயிர் நாதங்க ளோங்கிடவும்,

இன்பக் களியில் இயங்கும் புவிகண்டேன். (45)

துன்பக் கதையின் தொடருரைப்பேன், கேளீரோ!

(முற்றும்)

(அடுத்து குயிலும், மாடும்)

Back To Index

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X