For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யார் அந்த முகமூடிகள்?... யாரைக் குறிப்பிடுகிறார் கனிமொழி?

Google Oneindia Tamil News

Recommended Video

    யார் அந்த முகமூடிகள்?...யாரைக் குறிப்பிடுகிறார் கனிமொழி?- வீடியோ

    சென்னை: "நீங்கள் இல்லாத நாட்களில் புதிய முகமூடிகளை பார்த்துவிட்டேன்" என்று கனிமொழி தனது ஆதங்கத்தை குறிப்பிட்டு ஒரு கவிதை எழுதியுள்ளார். சர்ச்சைக்குரிய இந்த கவிதைதான் தற்போது டாக் ஆப் தி டவுனாக உள்ளது.

    கருணாநிதி இறப்புக்கு பிறகு ஏற்பட்ட அனுபவம் குறித்து ஒரு இதழுக்கு மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி கவிதை எழுதியுள்ளார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    கருணாநிதிக்கு பிறகு தான் எத்தகைய வேதனையில் இருக்கிறேன் என்பதை வெளிப்படுத்தும் விதமாக உள்ள இந்த கவிதையில் சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துகளை கனி குறிப்பிட்டுள்ளார்.

    யாரை குத்தி காண்பித்து

    யாரை குத்தி காண்பித்து

    அதாவது கருணாநிதியின் இறப்புக்கு பிறகு சில புதிய முகமூடிகளை பார்த்துவிட்டேன் என்றும் பொய்களால் ஆன உலகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அண்ணன் அழகிரியை போல் தனது தந்தையிடம் ஆதங்கத்தை கொட்டிய கனிமொழி யாரையோ குத்தி காண்பித்து இவ்வாறு வார்த்தைகளை பிரயோகித்துள்ளார் என்பது நன்றாக தெரிகிறது.

    பதவி தனக்குத்தான்

    பதவி தனக்குத்தான்

    ஆனால் அவர் யாரை சொல்கிறார் என்று தெரியவில்லை. கருணாநிதி உயிருடன் இருந்தவரை ஸ்டாலினை போல் கனிமொழிக்கும் முக்கியத்துவம் அளித்தே வந்தார். இந்நிலையில் தந்தைக்கு இறப்புக்கு பிறகு திமுக தலைவரான ஸ்டாலினின் பொருளாளர் பதவி தனக்கு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்திருக்கலாம்.

    டிஆர் பாலு

    டிஆர் பாலு

    ஆனால் அப்பதவி கிடைக்கவில்லை, துரைமுருகனுக்கு வழங்கப்பட்டு விட்டது. அதுபோல் அவர் வகித்த திமுக முதன்மை செயலாளர் பதவியானது தனக்கு கிடைக்கும் என்று நினைத்து, அந்த பதவியும் அவருக்கு பதிலாக டி.ஆர். பாலுவுக்கு கிடைத்துவிட்டது.

    கனிமொழி எதிர்ப்பு

    கனிமொழி எதிர்ப்பு

    4 துணை செயலாளர் பதவிகளில் ஒரு பதவி காலியாக உள்ளது. எனவே அப்பதவியாவது தனக்கு கிடைக்கும் என்று நினைத்திருந்த நிலையில் அது குறித்து திமுக கழகம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. முன்னதாக அழகிரி நடத்திய பேரணியின் போது திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றதற்கு கனிமொழி எதிர்ப்பு தெரிவிப்பார் என்று அழகிரி நம்பினார். ஆனால் அது நடக்கவில்லை.

    என்ன நடக்கிறது

    என்ன நடக்கிறது

    எனவே ஏதோ ஒரு விவகாரம் கட்சியின் முக்கியஸ்தர்கள் மனதில் புகைந்து கொண்டே இருப்பது தெரிகிறது. அது என்ன என்றுதான் தெரியவில்லை. இது தெரியாமல் உடன் பிறப்புகள் தவித்து வருகின்றனர். நெருப்பில்லாமல் புகையுமா என்ன!

    English summary
    Kanimozhi writes poem by telling some new faces are in DMK after his father's death. She didnt mention whom she is calling mask.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X