தமிழகத்தில் இன்று
டெல்லி:
நடப்பு ஆண்டில் ஏப்ரல் மாதம் சாதனை அளவாக நேரடி மற்றும் மறைமுக வரி மூலம் ரூ.8999.50 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட18.28 சதவீதம் அதிகமாகும்.
இது தொடர்பாக சமீபத்தில் வெளியான செய்திக்குறிப்பு:
மொத்த வரி வசூலில் ரூ.1643.64 கோடி நேரடி வரிகள் மூலம் வசூலிக்கப்பட்டது. இது கடந்த ஆண்டை விட 40.53 சதவீதம் அதிகமாகும். வருமானவரி மூலம் ரூ.2340.80 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதுவும் கடந்த ஆண்டை விட 39.62 சதவீதம் அதிகமாகும்.
மாநகராட்சி வரி மூலம் ரூ.735.87 கோடிதான் வசூலிக்கப்பட்டது. இதுவும் கடந்த ஆண்டை விட அதிகம்தான் என்றாலும், ஏப்ரல் மாதத்தில்அதிகப்படியான தொகை திருப்பித் தரப்பட்டுள்ளதால் வசூலான தொகை குறைந்துவிட்டது.
மறைமுக வரி மூலம் ரூ.7355.86 கோடி வசூலிக்கப்பட்டது. இது கடந்த ஆண்டை விட 14.24 சதவீதம் அதிகமாகும். கலால் வரி மூலம் ரூ.3781.13கோடியும், சுங்க வரி மூலம் ரூ.3345.90 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த இரு வகைகளிலும் கடந்த ஆண்டை விட அதிக தொகைவசூலிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் திட்டங்களும், வரி செலுத்துபவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள், கடுமையாக அமலப்படுத்தப்பட்ட சட்ட நெறிமுறைகள்தான்அதிக வரி வசூலுக்குக் காரணம் என்று நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.