For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

கமிஷ்னர்-எம்.பி மோதலில் கோவை மக்கள் யார் பக்கம்?

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:

கோவை எம்.பி.,ராதாகிருஷ்ணன், போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் இடையே நடந்த மோதலுக்கு, கோவை மக்களிடையே ஆதரவும், எதிர்ப்பும் சமஅளவில் உள்ளது.

கோவையில் இயங்கி வரும் பல்வேறு அமைப்புகள் போலீசார் தாக்கப்பட்டதைக் கண்டித்து கண்டன அறிக்கைகள் வெளியிட்டுள்ளன. இன்னும் சிலஅமைப்புகள் பாரதிய ஜனதாக் கட்சியின் போக்கைக் கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் செயலர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவையில் அமைதியை ஏற்படுத்திய போலீஸ் கமிஷனர்ராதாகிருஷ்ணனை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். ஆனால், பாரதிய ஜனதாக் கட்சியினர் தேவையற்ற வீண் பிரச்சாரத்தில் ஈடுபட்டு,தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது எனக் கூறியுள்ளார்.

தமிழ்நாடு அமைச்சுப் பணியாளர் சங்கம் பாரதிய ஜனதாத் தொண்டர்களுக்கு எதிராகக் குரல் எழுப்பியுள்ளது. திராவிடர் கழக பொதுச் செயலர்ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரதிய ஜனதாக் கட்சியின் தொண்டர்களின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவம்தொடர்பாக இதுவரை ஏன் யாரும் கைது செய்யப்படவில்லை? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை மாவட்ட முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு மற்றும் தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆகியவை பாரதிய ஜனதாக் கட்சி எம்.பி.,யின்போக்கு மற்றும் தொண்டர்களின் நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது எனக் கூறியுள்ளன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.,சுப்பராயன், கவுன்சிலர் தேவராஜ், தமிழ்நாடு தேசிய காங்கிரஸ் தொழிலாளர் சங்கத்தின் செயலர் தமிழ்ச் செல்வன்ஆகியோர் பா.ஜ.,வைக் கண்டித்து அறிக்கை விடுத்துள்ளனர்.

அதே சமயத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டச் செயலர் முருகவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், உணர்வுப் பூர்வமாகப் பாதிக்கப்பட்டுள்ளகட்சித் தொண்டரின் இறுதி ஊர்வலத்தைப் போலீசார் படமாக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த விஷயத்தில் போலீஸ் நடந்து கொண்ட முறைகண்டிக்கத்தக்கது. இது போலீஸ் அதிகாரிகளின் அதிகாரப் போக்கையும் அடக்குமுறையையும் காட்டுகிறது எனக் கூறியுள்ளார்.

பாரதிய மஸ்தூர் சங்கத்தின் தலைவர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரதிய ஜனதாக் கட்சியின் பெயரைக் கெடுக்க வேண்டும் என்றேபோலீசார் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர்.

பா.ஜ.,தொண்டர்கள் மீது பொய் வழக்குப் போட்டு அதனை நிரூபிக்க முடியாமல், இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது கண்டிக்கத்தக்கதுஎனக் கூறியுள்ளார்.

கம்மவார் இளைஞர் அணித் தலைவர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது மக்களின் பிரதிநிதியாக இருந்து வரும் எம்.பி,ராதாகிருஷ்ணன் மீதுபொய் வழக்குப் போடுவது போலீசாரின் அதிகாரப் போக்கைக் காட்டுகிறது. இதற்கு கம்மவார் இளைஞர் அணி கண்டனம் தெரிவிக்கிறது எனக்கூறியுள்ளார்.

இதே போன்று, போலீசாரின் நடவடிக்கையைக் கண்டித்து புரட்சிப்புகழ் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம், ஏழைத் தோழன் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம்,சரத்குமார் ரசிகர் நற்பணி மன்றம், புதிய நல இளைஞர் நற்பணிக்குழு, கோவை மாவட்ட தெலுங்கு தேவாங்கர் சங்கம், நுகர்வோர் உரிமைப் பாதுகாப்புக் குழு,தென்னிந்திய சமையற்காரர்கள் சங்கம் ஆகியவையும் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X