For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

6 முதல் 14 வயது குழந்தைகளுக்குக் கட்டாயக் கல்வி

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

இந்தியாவில் 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 8 ம் வகுப்பு வரை படிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் திட்டத்திற்கு ரூ 1 கோடிஒதுக்கப்படவுள்ளதாக மத்திய அரசு வியாழக்கிழமை அறிவித்தது.

இந்தத் திட்டத்தால் 2010 ம் ஆண்டுக்குள் 14 வயதுக் குட்பட்ட குழந்தைகள் அனைவரும் 8 ம் வகுப்பு வரை படித்திருப்பார்கள் என்று மத்திய அரசுஅறிவித்துள்ளது.

இதுகுறித்து டெல்லியில், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரமோத் மகாஜன் நிருபர்களிடம் கூறுகையில், அனைத்து குழந்தைகளுக்கும் 8 ம்வகுப்பு வரை கட்டாயக் கல்வி அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் "சர்வ சிக்ஷா அபியான் என்றழைக்கப்படும்.

இத்திட்டத்தின் மூலம் 6 முதல் 14 வயதுக்குட்டப்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் 8 ம் வகுப்பு வரை கல்வி அளிக்கப்படும். இந்தத் திட்டத்தைநிறைவேற்ற தோரயமாக ரூ. 1 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த 10 வருடங்களுக்கு இந்த நிதி செலவிடப்படும்.

இந்தியாவில் 6 முதல் 14 வயது வரை வயதுள்ள குழந்தைகளில், 3 குழந்தைகளுக்கு ஒரு குழந்தை என்ற அளவிலேயே பள்ளிகளுக்குச் செல்கிறார்கள்.இதில் 67 சதவீதம் பெண் குழந்தைகள் என்றார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X