For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பள்ளியின் அலட்சியத்தால் பாழான 24 பிளஸ் டூ மாணவர்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால் 24 மாணவ, மாணவியர் பிளஸ் டூ தேர்வு முடியவில் லை.

சென்னை அயனாவரத்தில் உள்ளது கிறிஸ்து ராஜா மேல்நிலைப் பள்ளி. இங்கு 10-ம் வகுப்பு வரை மட்டு மே கல்வித் துறையால் அங்கீகாரம்கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை மீறி பிளஸ் டூ வகுப்புக்கும் கடந்த 1997ம் ஆண்டு முதல் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வந்தனர்.

கல்வித் துறையை ஏமாற்றி, வேறு பள்ளிகள் மூலம் இங்கு பிளஸ்டூ தேர்வு எழுத மாணவர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் இந்தஆண்டுக்கும் 24 மாணவ, மாணவியர் பிளஸ் டூ வகுப்பில் சேர்க்கப்பட்டு படித்து வந்தனர். தேர்வுக்காக தலா ரூ. 250 கட்டணும் கட்டியிருந்தனர். இந்தநிலையில், பிளஸ் டூ தேர்வுகள் திங்கள்கிழமை முதல் துவங்கின.

ஆனால் இந்த 24 மாணவர்களுக்கும் தேர்வு எழுத ஹால் டிக் கெட் வழங்கப்படவில் லை. எழுத்துத் தேர்வுக்கு முன்பாக நடக்கும் செய்மு றைத் தேர்வுதங்களுக்கு நடத்தப்படாததால், பள்ளித் தாளாளரை அணுகி கேட்டனர் மாணவ, மாணவியர். அதற்கு, எழுத்துத் தேர்வுக்குப் பிறகும் கூட செய்முறைத்தேர்வு எழுத முடியும் என்று தாளாளர் ராஜ் மோகன் கூறியுள்ளார். அதை மாணவ, மாணவியரும் நம்பினர்.

இந்த நிலையில், திங்கள்கிழமை முதல் துவங்கிய எழுத்துத் தேர்வுக்கான ஹால் டிக் கெட் வந்து சேராததால், மாணவ, மாணவியருக்குச் சந்தேகம்வலுத்தது. இதையடுத்து சைதாப்பேட் டையில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகத்தை அணுகி விசாரித்தனர்.

பெற்றோரும் அவர்களுடன் சென்றனர். அப்போதுதான், கிறிஸ்து ராஜா பள்ளிக்கு பிளஸ் டூ வகுப்புக்கான அங்கீகாரமே வழங்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை மாணவர்கள் உணர்ந்தனர்.

எதிர்காலமே இருண்ட நிலையில், மாணவ, மாணவியர் அனைவரும் முதல்வர் கருணாநிதி, கல்வி அமைச்சர் அன்பழகன் ஆகியோரை நேரில் சந்தித்து மனுகொடுத்தனர். முதன்மைக் கல்வி அலுவலர் அறி வொளியிடம் மனு கொடுத்தனர். ஆனால் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கல்வித்துறைஅதிகாரிகள் கை விரித்து விட்டனர்.

அழுத கண்களோடு, துயரத் தோடும், முதன்மைக் கல்வி அலுவலகத்தில் திங்கள்கிழமை குவிந்த மாணவ, மாணவியர் தாங்கள் எழுத அனுமதிக்கப்படவேண்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலரிடம் கெஞ்சினர். ஆனால் தங்களால் எதுவு மே செய்யஇயலாது என்று அதிகாரிகள் கூறி விட்டனர்.

பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் தங்களின் எதிர்காலம் பாழாகி விட்ட துயரத் தோடு மாணவ, மாணவியர் தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர்.

இந்த சம்பவம் குறித்து முதன்மைக் கல்வி அலுவலர் அறி வொளி கூறு கையில், இந்த விஷயத்தில் தவறு பள்ளி நிர்வாகத்தின் மீதுதான். அவர்கள் மீதுமுறையான நடவடிக்கை எடுக்கப்படும். மாணவ, மாணவியர்களுக்கு எங்களால் உதவ இயலாது.

சில தனியார் பள்ளிகள் பணத்திற்கு ஆசைப்பட்டு இம்மாதிரி நடந்து கொள்கின்றன. பெற்றோர்களும், மாணவர்களும்தான் மிகவும் ஜாக்கிர தையுடன்நடந்து கொள்ள வேண்டும் என்றார்.

இதில் வேடிக்கை என்ன வென்றால், பள்ளித் தாளாளர் ராஜ் மோகனின் மகள் பியூலாவும் இதே பள்ளியில்தான் பிளஸ் டூ படித்து வந்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X