இன்று காட்டுக்குள் நுழைகிறது அதிரடிப்படை
ஈரோடு:
சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தேடி, வேட்டையைத் துவக்கும் அதிரடிப்படை வியாழக்கிழமை காட்டிற்குள்நுழைகிறது.
இதுவரை முகாம்களில் இருந்த அதிரடிப்படை அவ்வப்போது, வீரப்பனைத் தேடி அடிக்கடி காட்டுக்குள் சென்றுவந்து கொண்டுதான் இருந்தது. ஆனால் முழுமையான வீரப்பன் வேட்டையை முழுவீச்சில் ஆரம்பிப்பதற்காகவியாழக்கிழமை காட்டிற்குள் நுழைகிறது.
இதையொட்டி, வேட்டை நடக்கும் காட்டுப் பகுதியில் ஆடு, மாடு மேய்க்கவும், விறகு வெட்டச் செல்லவும்பொதுமக்களுக்கு அதிரடிப்படையினர் தடை விதித்துள்ளனர்.
காட்டுக்குள் வீரப்பனைத் தேடும் பணி தொடங்கியுள்ளதால், தாளவாடி, பண்ணாரி, அந்தியூர் உட்பட பல்வேறுகாட்டுப் பகுதியில் உள்ள பொதுமக்கள் காட்டுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள்ஆடு, மாடு மேய்க்கவோ, விறகு எடுக்கவோ தேடுதல் வேட்டை நடக்கும் வனப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்என அதிரடிப்படையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், வீரப்பனுக்கு உணவுப் பொருட்களை எடுத்துச் சென்ற ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.தாளவாடி அருகே உள்ள கோழிப்பாளையம் என்ற ஊரைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் மளிகைக் கடையில் அரிசிஉட்பட பல்வேறு உணவுப் பொருட்களை வீரப்பனுக்காக எடுத்துச் சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை உளவுப் பிரிவு போலீசார் பிடித்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.எனவே, வீரப்பன் குறிப்பிட்ட காட்டுப் பகுதியில் இருக்கலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் அதிரடிப்படையினர்களம் இறங்குகின்றனர்.
சுமார் 200 போலீசார் முதல் கட்டத் தேடுதல் வேட்டையில் ஈடுபடுகின்றனர். இவர்களது பணி தொடர்ந்துநடைபெறும்போது, அடுத்த பிரிவு போலீசாரும் ஈடுபடுவர்.
தேடுதல் பணியை ஒட்டி, வீரப்பன், பிணைக் கைதியாக வேறு யாரையாவது கடத்திச் செல்லக் கூடும் என்ற சூழ்நிலைநிலவுவதால், வனப் பகுதியோரம் உள்ள இடங்களில், கமாண்டோ படைகள் அடங்கிய பிரிவு சிறப்புப் பாதுகாப்புபணியில் ஈடுபட்டுள்ளது. இவர்கள் காடுகளின் எல்லையோர கிராமங்களில் கண்காணிப்பு பணியையும்மேற்கொண்டு வருகின்றனர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!