For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓட்டுநர்களின் பார்வை கோளாறால் அதிகரிக்கும் விபத்துக்கள்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

டெல்லியில் உள்ள முக்கிய சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு பலர் உயிரிழப்பதற்கு பஸ் ஓட்டுநர்களின்கண் பார்வைக் கோளாறுகள்தான் முக்கியக் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பத்திரிக்கை ஒன்று வெளியிட்டுள்ள செய்தி:

டெல்லியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதற்கு பஸ் ஓட்டுநர்களின் கண் பார்வையில் ஏற்பட்டுள்ளகோளாறுகள்தான் முக்கியக் காரணம் என்று தெரிய வந்துள்ளது.

தங்கள் கண்பார்வையில் ஏற்படும் கோளாறுகளை பெரும்பாலான ஓட்டுநர்கள் சட்டைசெய்வதில்லை. இந்தக்காரணத்தால் சாலைகளில் விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கின்றன.

டெல்லியில் உள்ள ஓட்டுநர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக் கழகம் பெரும்பாலான ஓட்டுநர்களின் கண்பார்வையில்ஏற்படும் கோளாறுகள்தான் விபத்துக்கு முக்கிய காரணமாகின்றன என்று தெரிவித்துள்ளது.

டெல்லி நகரில் 251 ஓட்டுநர்கள் (பஸ்) கிட்டப்பார்வை குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள். 247 ஓட்டுநர்கள்(பஸ்) தூரப்பார்வை குறைபாடுகளினால் பாதிக்கப்பட்டவர்கள். 5 பேர் வேறு சில குறைபாடுகளினாலும், 22 பேர்நிறப்பார்வை கோளாறுகளாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஓட்டுநர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக் கழக இயக்குநர் ஆர்.கே.பரிமு கூறுகையில், கிட்டப்பார்வை மற்றும்தூரப்பார்வை குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட பஸ் ஓட்டுநர்களுக்கு நாங்கள் கண்ணாடிகள் வழங்குகிறோம்.மாலைக்கண் நோய், கண்ணில் புரை ஏற்படுதல் போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாங்கள்இதுவரை எதுவும் செய்யவில்லை.

மேலும் பெரும்பாலான ஓட்டுநர்களுக்கு சாலைகளில் எப்படி வாகனங்களை ஓட்டிச் செல்ல வேண்டும் என்பதுதவிர சாலை விதிமுறைகள் பற்றி அதிகமாகத் தெரிவதில்லை.

கடந்த வருடம் ஓட்டுநர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி கழகத்தில் லைசென்ஸ் பெற வந்த ஓட்டுநர்களில் 22 சதவீதம்பேரும், இந்த வருடம் 25 சதவீதம் பேரும் சாலை விதிமுறைகள் குறித்து தெளிவாகத் தெரியாத காரணத்தால்லைசென்ஸ் பெறாமல் திரும்பிச் சென்றனர்.

டெல்லியில் உள்ள 9,000 அரசு பஸ் ஓட்டுநர்களில் 1.5 சதவீதம் பேர் இன்னும் சிறந்த ஓட்டுநர்களாகவில்லை.

கடந்த வருடம் 7,688 பேர் ஓட்டுநர் தேர்வு எழுத வந்திருந்தனர். இதில் 1,690 பேர் தேர்ச்சி பெறவில்லை. இந்தவருடம் 1,812 பேர் ஓட்டுநர் தேர்வு எழுத வந்திருந்தனர். இவர்களில் 461 பேர் தேர்ச்சி பெறவில்லை.

பஸ் ஓட்டுநர்களை ஒப்பீடு செய்து பார்க்கையில், பள்ளிக்கூட பஸ் ஓட்டுநர்கள் சாலை விதிமுறைகள் மற்றும்வாகனங்களை எப்படி ஓட்டுவது என்ற அடிப்படை விதிமுறைகளில் நன்கு பயிற்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள்.

பள்ளிக்கூட பஸ் ஓட்டுநர்களில் கடந்த வருடம் ஓட்டுநர் தேர்வு எழுத வந்திருந்தவர்களில் 19 சதவீதம் பேர் தேர்ச்சிபெறவில்லை. அதே போல் இந்த வருடம் தேர்வு எழுத வந்திருந்தவர்களில் 23 சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை.

இருப்பினும் பள்ளிக்கூட பஸ்களை ஓட்டிச் செல்லும் டிரைவர்களும் சில சமயங்களில் விபத்து நடக்கக் காரணமாகஇருக்கின்றனர். 1997 ம் ஆண்டு மிகக் கோரமான விபத்து ஒன்று நடந்தது. பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்றபஸ் யமுனை ஆற்றில் கவிழ்ந்து விழுந்ததில் 28 பள்ளிக்குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

பள்ளிக்கூட பஸ் ஓட்டுநர்களுக்கு, ஓட்டுநர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக் கழகம் சில சிறப்புப் பயிற்சிகளை அளித்துவருகிறது.

பஸ் ஓட்டுநர்கள் அனைவரையும் பரிசோதித்து அவர்களுக்கு கண் பார்வை சரியாக இருக்கிறதா என்பது குறித்துசான்றிதழ் அளிக்க அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது ஓட்டுநர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கழகம்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், ஐயூபான்ட் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனத்தினர்ஓட்டுநர்களின் கண் பார்வையை பரிசோதிப்பது குறித்து பரிசீலிப்பதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

ஐ .ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X