For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

த.மா.காவை குற்றம் கூறினால்...? - பீட்டர் அல்ஃபோன்ஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வெளியே சொல்ல முடியாத காரணங்களால் கட்சிகளில் இருந்து இடம் பெயர்ந்து புதிய புகலிடம் தேடி சென்றுள்ளஅரசியல் அகதிகள், த.மா.காவை இழிவாக பேசுவதை அனுமதிக்க முடியாது என்று த.மா.காவின் தலைவர்களில்ஒருவரான பீட்டர் அல்போன்ஸ் கூறி உள்ளார்.

தமிழக காங்கிரசுக்கு இரண்டு தலைவர்கள் இருக்க முடியாது என்று கூறி தமிழக காங்கிரஸ் தலைவர்இளங்கோவனையும், த.மா.கா. தலைவர் மூப்பனாரையும் குற்றம் சாட்டி இளங்கோவன் எதிர்ப்பாளர்கள்சனிக்கிழமை சென்னையில் பேட்டி அளித்தனர்.

காங்கிரசுடன், த.மா.கா. இணைந்தால் மட்டுமே மூப்பனாருடன் சேர்ந்து செயல்ட முடியும். இல்லை என்றால்த.மா.காவுடன் சேர்ந்து செயல்பட முடியாது என்றும் இளங்கோவன் எதிர்ப்பாளர்களான முன்னாள் மத்தியஅமைச்சர் அருணாசலம், முன்னாள் எம்.பிக்கள் அன்பரசு, அடைக்கலராஜ் உள்ளிட்டோர் கூறினர்.

இவர்களின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து த.மா.கா.தலைவர்களில் ஒருனரான பீட்டர் அல்ஃபோனஸ்சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:

காங்கிரசார் என்று தங்களை கூறிக் கொள்ளும் சிலர் த.மா.கா. தலைவர் மூப்பனாரையும், த.மா.காவையும்தேவையில்லாமல் விமர்சித்து வருகிறார்கள். காங்கிரசின் நடவடிக்கையையும், செயல்பாடுகளையும் என்றுமேத.மா.கா. விமர்சித்தது கிடையாது.

ஆனாலும் எங்கள் தலைவரை பற்றியும், தமிழகத்தில் தேசிய சக்திகளின் எதிர்காலத்திற்காக அனைத்துமுயற்சிகளையும் மேற்கொள்ளத் தயாராக இருக்கும் த.மா.கா.குறித்து தெரிவித்த கருத்துக்களுக்கு பதில் கூறவேண்டிய கட்டாயம் உள்ளது.

த.மா.கா. உருவாகிய நாளில் இருந்தே, அதனுடைய மாறாத நிலைபாடுகளில் ஒன்று. எந்த சூழ்நிலையிலும்காங்கிரஸ் கட்சி பலவீனம் அடைய த.மா.கா. காரணமாக இருக்கக்கூடாது என்பதாகும்.

தனக்கு மிகப் பெரிய இழப்புகள் ஏற்படும் என்று தெரிந்தும் காங்கிரசையும், சோனியாவையும் த.மா.கா. ஆதரித்துஉள்ளது.

மூப்பனாரின் தொலை நோக்கு பார்வையையும், சுயநலமில்லாத அரசியல் அணுகுமுறையையும் உணரந்துகொண்ட அகில இந்திய காங்கிரஸ் தவைமை கடந்த சட்டசபை தேர்தலில், மூப்பனாரே தமிழக காங்கிரசுக்குமும்பிரதிநிதியாக இருந்து தேவையான இடங்களைப் பெற கூட்டணிக் கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தித்தரவேண்டும் என கேட்டுக் கொண்டது.

த.மா.காவில் இருக்கும் பலருக்கும் தேர்தலில் போட்டியிட இடம் தருவதை தவிர்த்து,காங்கிரசுக்கு தேவையானஇடஙகளை பெற்றுத்தந்து மட்டும் இல்லாமல், போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்ள் வெற்றி பெற மூப்பனார்எவ்வளவு உதவிகள் செய்தார் என்பது அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கும், போட்டியிட்ட காங்கிரஸ்வேட்பாளர்களுக்கும் தெரியும்.

யாராவது தங்கள் சுயநலனுக்காக காங்கிரசைப் பயன் படுத்த முனைந்தால் அது காங்கிரசின் எதிர்கால நலனுக்குஊறு விளைவிக்கும்ய காங்கிரசின் பெயரைச் சொல்லி தமிழகத்தில் நடந்து வரும் நடவடிக்ககைகள் பற்றியும்காங்கிரஸ் தலைமைக்கு த.மா.காவின் நாடாளுமன்ற குழு எடுத்துச் சொல்லும்.

வெளியே சொல்ல முடியாத காரணங்களால் கட்சியில் இருந்து பெயர்ந்து புதிய புகலிடம் தேடிக் கொண்டுள்ளஅரசியல் அகதிகள் புகுந்த இடங்களில் அங்கீகாரம் தேடிக் கொள்வதில் எங்களுக்கு ஆட்சேபம் இல்லை.

ஆனால் த.மா.காவைப் பற்றி இழிவாக பேசி அவர்களுக்கு பதவிகள் பெறுவதை அனுமதிக்க முடியாது. இத்தகையபோக்கை சம்பந்தப்பட்டவர்கள் கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார் பீட்டர் அல்போன்ஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X