முதல்வரின் இலாகா மாறுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வசம் உள்ள காவல்துறை மூத்த அமைச்சர் ஒருவருக்குமாற்றப்படலாம் என்று தெரிகிறது.

தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் வெள்ளிக்கிழமை இரவுபதவியேற்றார்.

அவருடன் 24 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு, ஆளுநர் பதவிப்பிரமானம் செய்து வைத்ததுசெல்லாது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்ததால் முதல்வர் பதவியிலிருந்துஜெயலலிதா அகற்றப்பட்டார்.

புதிய முதல்வராகியுள்ள ஓ.பன்னீர் செல்வம் நியமனத்தால் சில மூத்த அமைச்சர்கள்அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

தங்களை விட அனுபவத்தில், வயதில் குறைந்த ஓ.பன்னீர் செல்வத்தின் கீழ் பணிபுரியஅவர்கள் தயங்குவதாக தெரிகிறது.

அரசியலில் பெரிய அளவில் அனுபவம் இல்லாத, தங்களுக்குக் கீழ் இருந்து வந்தஓ.பன்னீர் செல்வத்திற்குக் கீழ் பணிபுரிய அவர்கள் பெரிதும் தயங்குவதாகக்கூறப்படுகிறது.

இதேபோன்ற எண்ணம் அதிகாரிகள் மத்தியிலும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

தம்பித்துரை, பொன்னையன் போன்றவர்கள் தங்களது அதிருப்தியை தைரியத்துடன்ஜெயலலிதாவிடம் கூறியதாகக் கூறப்படுகிறது. அவர்களது கருத்தை ஆமோதித்தஜெயலலிதா சற்று பொருத்திருங்கள், இது நிரந்தரமானதல்ல.

விரைவில் உங்களுக்கு சந்தோஷமான வகையில் செயல்பாடுகள் இருக்கும் என்றாராம்.

இந்த நிலையில் முதல்வர் பன்னீர் செல்வத்திடம் இருக்கும் சில முக்கிய துறைகள்விரைவில் மூத்த அமைச்சர்கள் சிலருக்கு மாற்றப்படக் கூடும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக போலீஸ் துறையை மிகவும் கவனமாக கையாள வேண்டும். தற்போது டிஜிபிரவீந்திரநாத் சஸ்பெண்ட் செய்து வைக்கப்பட்டுள்ளார். கருணாநிதி கைது தொடர்பாகவிசாரணைக் கமிஷன்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நேரத்தில் போலீஸ் துறை, திறமையான ஒருவரிடம் இருப்பதுதான் நல்லது என்றுஜெயலலிதாவுக்கு எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.

பன்னீர்செல்வத்தால் திறம்பட போலீஸ் துறையை பார்த்துக் கொள்ள முடியுமா என்றசந்தேகம் ஜெயலலிதாவுக்கு எழுந்துள்ளது.

எனவே போலீஸ் துறையை அவரிடமிருந்து வேறு ஒரு மூத்த அமைச்சரிடம் கொடுக்கஜெயலலிதா திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. அனேகமாக பொன்னையன் அல்லதுதம்பித்துரையிடம் அந்தத் துறை கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

தற்போதைக்கு இந்த மாற்றங்கள் இருக்காது எனவும் கூறப்படுகிறது. முதல்வர்பதவியிலிருந்து அகன்று விட்டாலும் கூட அரசின் செயல்பாடுகளில்ஜெயலலிதாதலையிடுவதாக பேச்சு வந்து விடும் என்பதால் சிறிது நாட்கள் கழித்து இந்தமாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற