எந்த நேரமும் போர் வெடிக்கும்- வாஜ்பாய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரா (உ.பி.):

"எந்த ரூபத்தில் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் போர் வரலாம்.அதனால் அனைவரும் விழிப்பாக இருங்கள்" என்று இந்திய மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார் பிரதமர்வாஜ்பாய்.

மதுரா அருகே ஒரு பேரணியைத் துவக்கி வைத்து வாஜ்பாய் மேலும் பேசியதாவது:

செருப்பு கடிக்கும் என்று அதை அணிந்த பிறகுதான் நன்கு தெரியும். அமெரிக்காவுக்கும் இதே பாடம்தான்.தங்களை பயங்கரவாதிகள் தாக்கிய பிறகுதான் அவர்களுக்கு இந்த உண்மை புரிய ஆரம்பித்துள்ளது.

ஆனால், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போர் புரிவது நமக்கெல்லாம் ஒன்றும் புதிதல்ல. கடந்த 20 ஆண்டுகளுக்கும்மேலாக, பயங்கரவாதத்தை எதிர்த்துப் போர் புரிந்து, ஆயிரக்கணக்கான உயிர்த் தியாகம் செய்திருக்கிறோம்.

பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகள், தங்கள் கொள்கைகளை மாற்றிக் கொள்ளாவிட்டால், அதுவேஅவர்களை அழித்து விடும்.

அரசியல் கட்சிகள் தேவையில்லாத பிரச்சனைகளை வளர்ப்பதைவிட, பயங்கரவாதத்திற்கு எதிரானநடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் வாஜ்பாய்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற