ஜி.கே.வாசனுக்கு ஆறுதல் கூறினார் வீரமணி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

மறைந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாரின் வீட்டுக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவரது மகன்ஜி.கே.வாசனுக்கு ஆறுதல் கூறினார்.

மூப்பனார் இறந்த சமயம் வீரமணி அமெரிக்காவில் சிகிச்சைக்காக சென்றிருந்தார். சமீபத்தில்தான் அவர் சென்னை திரும்பினார்.

இந்த நிலையில் வியாழக்கிழமை மூப்பனார் வீடு உள்ள ஆழ்வார்ப்பேட்டைக்குச் சென்ற அவர் மூப்பனாரின் படத்திற்கு மாலைஅணிவித்தார்.

பிறகு மூப்பனாரின் மகனும், தமாகா தலைவருமான ஜி.கே.வாசனிடம் துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற